சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு!

நாடு முழுக்க பெரு நகரங்களில் நாளை விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க பெரு நகரங்களில் நாளை விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வரும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அதன்படி பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் நபர்கள் கட்டாயமாக இ பாஸ் பெற விண்ணப்பித்து இருக்க வேண்டும், அதேபோல் கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்சிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்

விமான சேவை

விமான சேவை

இதேபோல் தற்போது நாடு முழுக்க பெரு நகரங்களில் நாளை விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விமான நிலையத்தில் கண்டிப்பாக வெப்பநிலை சோதனை கருவிகள் இடம்பெற்று இருக்க வேண்டும். மக்கள் எல்லோரும் சமூக இடைவெளி விட வேண்டும். கவுண்டர் முன்பு சரியான க்யூ இருக்க வேண்டும்.

கிருமி நாசினி அவசியம்

கிருமி நாசினி அவசியம்

எல்லா பயண சாமான்களும் கண்டிப்பாக கிருமி நாசினி மூலம் ஏர்போர்ட் அதிகாரிகளால் கழுவப்பட வேண்டும். பயணிகள் உடன் நேரடியாக தொடர்பு ஏற்படும் வகையில் பணிகளை செய்யும் ஏர்போர்ட் அதிகாரிகள் பிபிஇ உடை அணிந்து இருக்க வேண்டும். மாஸ்க் கிளவுஸ் அணிய வேண்டும். அறிகுறி இருக்கும் எல்லா நபர்களும் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனிமை முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

ஷிப்ட் முறை

ஷிப்ட் முறை

விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு வாரம் மட்டுமே பணியாற்ற முடியும். அடுத்த இரண்டு வாரம் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு உடனே பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான மற்ற விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தூய்மை பணிகள் அவசியம்

தூய்மை பணிகள் அவசியம்

விமான நிலையத்தில் முறையாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய கொரோனா அறிகுறி இல்லாமல் இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் மட்டும் தமிழகம் செல்லும் விமானத்தில் ஏற முடியும், என்று தமிழக அரசு கூறியுள்ளது.

English summary
Tamilnadu govt release rules and regulations for airports in the state as domestic travel starts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X