சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம்.. ஸ்டாலின் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

2018-2019ம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலை சைல்டு லைன் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கேரளா முதல் இடத்திலும் (1742 புகார்கள்), தமிழகம் இரண்டாவது இடத்திலும் (985 புகார்கள்), மகாராஷ்டிரா (443 புகார்கள்) மூன்றாவது இடத்திலும், மேற்கு வங்காளம் (436 புகார்கள்) 4வது இடத்தையும் பிடித்துள்ளன.

கர்நாடகா 428 புகார்களுடன் ஐந்தாவது இடத்திலும். மத்திய பிரதேசம் 402 புகார்களுடன் 6வது இடத்தையும், ஆந்திரா 399 புகார்களுடன் 7வது இடத்தையும், உத்தரப்பிரதேசம் 381 புகார்களுடன் 8வது இடத்தையும், டெல்லி 318 புகார்களுடன் 9வது இடத்தையும், சட்டீஸ்கர் 277 புகார்களுடன் 10வதுஇடத்தையும் பிடித்துள்ளன.

tamilnadu has 2nd most child sexual abuse plaints: mk stalin attacks tn govt

இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில பதிவிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

என்பிஆர்.. என்சிஆர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.. பாகுபட்டை உருவாகுமோ.. ஸ்டாலின் கவலை என்பிஆர்.. என்சிஆர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.. பாகுபட்டை உருவாகுமோ.. ஸ்டாலின் கவலை

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
mk stalin attacks tn govt over childline released state vice list of child sexual cases , tamilnadu has 2nd most child sexual abuse plaints
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X