சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்த கொரோனா.. வேகம் எடுக்கும் செங்கல்பட்டு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று அதிகமாக உள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் வேகம் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் 124 பேருக்கும் ஏப்ரல் மாதம் 2,199 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில் மே மாதம் (மே 30) 17, 923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொஞ்சம் அதிகமாக நடந்தது.. அதற்கே இப்படியா.. தமிழகத்தில் ரெக்கார்ட் கொரோனா கேஸ் பதிவாக காரணம் இதுதான்கொஞ்சம் அதிகமாக நடந்தது.. அதற்கே இப்படியா.. தமிழகத்தில் ரெக்கார்ட் கொரோனா கேஸ் பதிவாக காரணம் இதுதான்

மே 1

மே 1

இன்றைய தினம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மே 11-ஆம் தேதி உச்சபட்சமாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதை ஓரங்கட்டிவிட்டு இன்று மிகவும் அதிகமாக 938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் இன்று வரை பாதிப்பு எண்ணிக்கை குறித்து பார்ப்போம்.

669 பேருக்கு

669 பேருக்கு

மே 1 ஆம் தேதி 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மே 2-ஆம் தேதி 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி 266 பேருக்கும் பாதிப்பு இருந்தது. இதையடுத்து கடந்த மே 4 ஆம் தேதி முதல் 527 பேருக்கும் மே 5 ஆம் தேதி 508 பேருக்கும் மே 6-ஆம் தேதி 771 பேருக்கும் மே 7ஆம் தேதி 580 பேருக்கும் பரவியது. அது போல் மே 8-ஆம் தேதி 600 பேருக்கும், மே 9-ஆம் தேதி 526 பேருக்கும் மே 10ஆம் தேதி 669 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மே 20ஆம் தேதி

மே 20ஆம் தேதி

பின்னர் மே 11-ஆம் தேதி மிகவும் உச்சபட்சமாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மே 12 ஆம் தேதி 716 பேருக்கும் மே 13 ஆம் தேதி 509 பேருக்கும் மே 14-ஆம் தேதி 447 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி 639 பேருக்கும் மே 18-ஆம் தேதி 536 பேருக்கும், மே 19ஆம் தேதி 688 பேருக்கும், மே 20-ஆம் தேதி 743 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இன்று புதிய உச்சம்

இன்று புதிய உச்சம்

அது போல் மே 21-ஆம் தேதி 776 பேருக்கும் மே 22 ஆம் தேதி 786 பேருக்கும், மே 23 ஆம் தேதி 759 பேருக்கும் மே 24 ஆம் தேதி 765 பேருக்கும் மே 25ஆம் தேதி 805 பேருக்கும், மே 26ஆம் தேதி 646 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதை போல் மே 27ஆம் தேதி 817 பேருக்கும் மே 28 ஆம் தேதி 827 பேருக்கும் மே 29 ஆம் தேதி 874 பேருக்கும் மே 30 ஆம் தேதி 938 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Tamilnadu has ever reported this kind of highest spike of Corona cases. Today 938 cases tested positive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X