சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோயாளி இருந்தும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவே இருப்பது ஏன்? சுகாதாரத் துறை விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தும் அந்த மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்தில் வராமல் பச்சை மண்டலத்திலேயே இருப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

Recommended Video

    கொரோனா நோயாளி இருந்தும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவே இருப்பது ஏன்?

    தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

    வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

    இரண்டே மண்டலம்.. 50% கொரோனா நோயாளிகளின் ஒரே சோர்ஸ்.. வடசென்னையில் என்ன நடக்கிறது? பின்னணி!இரண்டே மண்டலம்.. 50% கொரோனா நோயாளிகளின் ஒரே சோர்ஸ்.. வடசென்னையில் என்ன நடக்கிறது? பின்னணி!

    சாய்பாபா கோயில்

    சாய்பாபா கோயில்

    இந்த முதியவர் அண்மையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது. மேலும் இவருடன் சென்ற 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது போல் அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    ஆரஞ்ச் மண்டலம்

    ஆரஞ்ச் மண்டலம்

    இந்த முதியவர் அண்மையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது. மேலும் இவருடன் சென்ற 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது போல் அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலமாக மாறும் என கூறப்பட்டது.

    அதிகாரப்பூர்வமற்ற தகவல்

    அதிகாரப்பூர்வமற்ற தகவல்

    இந்த நிலையில் நேற்று மாலை கொரோனா குறித்த நிலவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிப்பு குறித்த விவரத்தில் பூஜ்யம் என்றே இருந்தது. அது போல் கொரோனா வரைப்படத்திலும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவே இருந்தது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு வேளை காலையில் வந்தது அதிகாரப்பூர்வமற்ற தகவலோ என மக்கள் குழம்பினர்.

    சுகாதாரத் துறை விளக்கம்

    சுகாதாரத் துறை விளக்கம்

    இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த அந்த முதியவர் ஆந்திராவிலிருந்து வந்தார். அவருக்கு சேலம் சோதனை சாவடியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேரடியாக அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பட்டியல் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுவிட்டது என விளக்கம் அளித்தார்.

    English summary
    TN Health department secretary Beela Rajesh explaind why Krishnagiri retains Green zone despite one patient found positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X