சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொழிலாளர்கள், மாணவர்களிடம் இம்மாத வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை

Google Oneindia Tamil News

சென்னை: தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு தன் வீட்டையே கொடுத்த நபர் | ONEINDIA TAMIL

    நாடு முழுக்க லாக் டவுன் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு கூட முடியாமல் போக்குவரத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    Tamilnadu: House owners should not insist house rents

    இந்த நிலையில், தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நிதி பேக்கேஜ் ஒன்றை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    இதேபோன்று, மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் எங்கு எங்கு தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்கிறார்கள். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

    சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி? சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி?

    அதில், அடுத்த ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகையை 2 தரப்பினரிடம் வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை கேட்கக்கூடாது, அது இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, வாடகை கேட்க கூடாது. வாடகை கேட்டு காலிசெய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு இந்த மாதத்தின் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும், உரிய காலத்திலும் ஊதியத்தை வழங்குவது கட்டாயம். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    House owners should not insist house rents, says Tamilnadu government in an order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X