• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வினையாகும் கள்ளக்காதல் விளையாட்டுக்கள்.. பாரபட்சமே இல்லாமல் கதறும் குடும்பங்கள்.. என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை : விபரீதத்தை ஏற்படுத்தும் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் அதிகரித்து இருப்பதால், அவை குடும்பங்களை நிலைகுலையச் செய்து வருகின்றன. அண்மைக்காலங்களில் கள்ளக்காதல் கொலைகள், குற்றங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளன.

மதுபோதை, புதிய நண்பர்கள் சவகாசம், மணவாழ்க்கையில் திருப்தி இன்மை, வேலைக்கு செல்லும் இடத்தில் நட்பு, பொருளாதார திறமின்மை, இனக்கவர்ச்சி, ஆறுதல் பேச்சுக்கள் போன்றவற்றை இதற்கு காரணமாக கூறலாம்.

கடந்த இரண்டு மாதங்களில் தினசரி 2 அல்லது 3 கள்ளக்காதல் குற்றங்களை செய்தியாளனாக தமிழகத்தில் பார்த்து வருகிறேன். ஏராளமானோர் கள்ளக்காதல் கொலைகளால், அல்லது தற்கொலைகளால் பலியாகி உள்ளனர்.

தங்கையின் கணவருடன் கள்ளக்காதல்.. கடைசியில் விபரீத முடிவெடுத்த பெண்.. அனாதையான குழந்தைகள்! தங்கையின் கணவருடன் கள்ளக்காதல்.. கடைசியில் விபரீத முடிவெடுத்த பெண்.. அனாதையான குழந்தைகள்!

நிறைய கொலைகள்

நிறைய கொலைகள்

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 குற்றங்களுக்கு மேல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இந்த சம்பங்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அல்லது தற்கொலை செய்துள்ளனர். இவை எல்லாம் போலீசாரின் வழக்குகளால் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த போலீசாருக்கு கள்ளக்காதல் தான் காரணம் என்று வந்ததால் வெளியில் தெரிந்தது.

கள்ளக்காதல் காரணம்

கள்ளக்காதல் காரணம்

உண்மையிலேயே இந்த கள்ளக்காதல் காரணமாக எத்தனை பேர் இந்த 8 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன என்பதை எடுத்து பார்ததால் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதங்கள் தெரியும். முறையற்ற உறவுகளுக்கு என்ன காரணம் என்று செய்திகளில் வந்த காரணங்களை பார்த்தால், மதுபோதை, கணவனின் மதுப்பழக்கத்தை வெறுக்கும் மனைவி, அவருடை ய சண்டைகளால் விரக்தி அடைந்து புதிய ஆண் நட்புகள் கிடைத்தால், அவர்களின் ஆறுதல் வார்த்தைக்கு அடிமையாகி நாளடைவில் கள்ளக்காதலில் விழுந்து விடுவது போன்றவை உள்ளன.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

மதுபோதை பழக்கமே இல்லை. ஆனாலும் கள்ளக்காதல் வருகிறது. எப்படி என்றால் சமூக வலைதளங்களில் ஏற்படும் புதிய நட்பு காரணமாக இருக்கலாம். பேஸ்புக்கில் ஆறுதலாக பேசுவது, புதிய புதிய பரிசுகளை தந்து அசத்துவது என்று ஆரம்பிக்கும் நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக வளர்கிறது. இதேபோல் வேலைக்கு செல்லும் இடத்தில் இனகவர்ச்சி, கணவனைவிட வருமானம், கணவனின் உடை, நடை, செயல்பாடுகளை புதிய ஆண் நண்பருடன் ஒப்பிட்டு பார்த்து அவர்களின் வலையில் விழுவது இதுவும் காரணமாக இருக்கிறது. கணவனிடம் கிடைக்காத அன்பு மற்றவனிடம் கிடைக்கும் போது அதில் விழுந்து கடைசியில் அது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வருகிறது.

சந்தேகம்

சந்தேகம்

காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கள்ளக்காதலில் விழுந்துவிடுகிறார்கள். இதற்கு காரணம், காதலிக்கும் போது காதலன் அல்லது காதலி அவர்கள் தங்கள் பிளஸ்ஸை மட்டுமே காண்பிப்பார்கள். நல்ல உடை அணிவது, இனிக்க இனிக்க பேசுவது , கேலிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களையும் ரசிப்பது போன்றவை பிடிக்கும். ஆனால் திருமணம் ஆன பின்னர் அவர்களின் மைனஸ் தெரியவரும் போது வெறுப்பு வந்துவிடுகிறது. ஒரே ஒரு குற்றச் செயலை, இதற்கு உதாரணமாக சொல்கிறேன். உயிருக்கு உயிராக காதலித்த ஜோடி, பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டது. முதல் ஒரு 6 மாதம் நன்றாக போனது. அதன்பின்னர் அவனது கணவன் குடிப்பழக்கத்தை வெறுக்க ஆரம்பித்துள்ளார் மனைவி. இதனால் கோபப்பட்ட கணவன் அடிக்க தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் யாரிடம் போனில் பேசினாலும் சந்தேகப்பட தொடங்கி உள்ளான்.இதனால் விரக்தியில் இருந்த அந்த பெண்ணுக்கு டிரைவர் ஒருவரின் பழக்கம் ஏற்படுகிறது.டிரைவர் ஆசையாக பேசுகிறார். இதில் மயங்கி அந்த பெண். சந்தேகப்படும் கணவனின் சந்தேகத்தை உண்மை என்று நிரூபித்துவிடும் என்று துணிந்து அவனுடன் நெருக்கமாக பழகுகிறாள்.இறுதியில் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தது. கடைசியில் கொலையில் முடிந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

மேலே சொன்னவை எல்லாம் பெண்கள் கள்ளக்காதலில் விழுந்ததற்கான காரணங்களாக இருக்கின்றன. அதேபோல் ஆண்கள் கள்ளக்காதலில் விழ காரணமும் மேல சொன்னவையுடன் பொருந்தும். மனைவியை தவிர வேறு பெண்களுக்கு ரூட் விடுவது சிலருக்கு எப்போதுமே வழக்கம். அவர்களின் மனநிலை கள்ளக்காதலுக்கு முக்கிய காரணம் . அவர்களின் வலையில் அப்பாவி பெண்கள் விழுகிறார்கள். ஆண்கள் கள்ளக்காதலுக்கு இதை தவிர மனைவியிடம் உறவில் திருப்தி இன்மை, மனைவியைவிட பிற பெண்கள் அழகாக தெரிவது போன்றவையும் காரணமாக சொல்லலாம். ஆனால் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால் கள்ளக்காதல் காரணமாக கொலை அல்லது தற்கொலை ஏற்படுவதால் உறவுகள் நொடிந்து போகின்றன.குறிப்பாக பிள்ளைகள் அனாதைகள் ஆகின்றன. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

சிங்கிள் பார்டனர்கள்

சிங்கிள் பார்டனர்கள்

கள்ளக்காதல் எதனால் ஏற்படுகிறது என்பது மனநல மருத்துவர் இளையராஜா அவர்களிடம் கேட்டேன்.. அப்போது அவர் கூறியதாவது: திருமண உறவில் சிக்கல் என 10பேரை கவுன்சில் செய்தால் இதில் 6 கேஸ்கள் திருமணத்தை மீறிய உறவுகள் காரணமாக இருக்கிறது. இப்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலர் சிங்கிள் பார்டனர் என்று இல்லை. மல்டி செக்ஸ் பார்டனர்களாக உள்ளனர். இவர்களுக்கு கல்யாணம் ஆனாலும் ஒருவனுக்க ஒருத்தி என்ற தத்துவத்திற்கு எல்லாம் செல்பவர்கள் இல்லை. இரண்டாவது காரணம் பாலியல் சைட்டுகளை (பாலியல் இணையதளங்கள், புத்தகங்கள் படங்கள் பார்ப்பவர்கள்) அதிகம் பார்ப்பவர்களுக்கு ஹைபர் செக்ஸ்வாலிட்டி டெவலப் ஆகும். திருமணத்தை மீறி உறவுக்கு காரணமாகிறது.

நேரம் ஒதுக்காதது

நேரம் ஒதுக்காதது

இதேபோல் யாருக்கெல்லாம் குடும்பத்தில் உரிய முக்கியத்துவம் இல்லையோ, அப்போது திருமணத்தை மீறிய உறவுகளுக்கு காரணமாகிறது. உதாரணமாக கணவன் அல்லது மனைவி தங்கள் பார்ட்னருடன் நேரம் ஒதுக்காமல் வேறு யாராவது அவர்களுக்கு நேரம் ஒதுக்கி அன்பாக பேச ஆரம்பித்தார்கள் என்றால் அதுவும் முறையற்ற உறவில் முடிய வாய்ப்பு உள்ளது. ஏதோ ஒரு வகையில் கணவன் அல்லது மனைவி சரியான அன்பு காட்டவில்லை , இன்னொருவர் கொடுக்கிறார் என்றால் அங்கு போக வாய்ப்பு உள்ளது. ஏதோ ஒருவகையில் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட என்னை ஆஹா ஒஹா என்று பாராட்டுகிறார்கள், நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறி திருமணத்தை மீறிய உறவில் செல்ல வாய்ப்பு உள்ளது. கணவனின் தேவையை அல்லது மனைவியின் தேவையை பூர்த்தி செய்யாவிட்டாலும் அப்படி செல்ல வாய்ப்பு உள்ளது.

பாலியல் படங்கள்

பாலியல் படங்கள்

மனைவி அல்லது கணவன் ஈடுபாட்டில் இல்லை, நண்பனாக இல்லை. உற்சாகமூட்டுபவராக இல்லை, ஆறுதல் சொல்பவர்களாக இல்லை என்றால் அப்படி போக வாயப்பு உள்ளது. செக்ஸ் விஷயங்களில் திருப்தி இல்லை என்ற காரணத்தாலும் கணவன் அல்லது மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். எனினும் கள்ளக்காதுலுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.இது மட்டும் தான் காரணம் என்று நாம் வகைப்படுத்திவிட முடியாது. அதிகப்படியான மதுப்பழக்கம், பாலியல் படங்களை அதிகம்பார்ப்பவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மதுப்பழகத்தை கைவிடுவது, பாலியல் படங்களை அதிகம் பார்ப்பதை குறைத்தால் பாலியல் ஆசைகள் தூண்டப்படாது . தவறான வழியில் செல்வது தடுக்கப்படும். யாரோ தெரிந்தவர்கள் கள்ளக்காதலில் விழுந்துவிட்டார்கள் என்பதால் மனைவி அல்லது கணவனை சந்தேகிப்பதை தவிர்க்க வேண்டும். கணவன் அல்லது மனைவி இருவரும் இவர் நமக்ககானவர், நம் திருமண உறவு என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்" இவ்வாறு டாக்டர் இளையராஜா கூறினார்.

English summary
illisit love games are on the rise, and families are falling apart. illisit love murders and crimes have increased in Tamil Nadu in recent times. Alcoholism, the acquaintance of new friends, dissatisfaction in marriage, friendship at work, economic incompetence, consolation speeches can be said to be the reason for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X