சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடையோடு நடமாடுங்கள்.. இன்றுமுதல் கடும் வெயில்.. எல்லாம் ஃபனி செய்த கைங்கரியம்- தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கடும் வெயிலுக்கு தயாராகாகுங்கள் மக்களே.. எல்லாத்துக்கும் ஃபனி தான் காரணம்- வீடியோ

    சென்னை: சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    ஃபனி புயல் ஒடிஸா அருகே பூரியில் நாளை கரையை கடக்க போகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில் ஆபத்தான ஃபனி புயல் சென்னையை விட்டு நகர்ந்து விட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வெப்பம் அதிகமாக இருக்கும்.

    தமிழக எல்லையை கடந்தது ஃபானி புயல்... ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறதுதமிழக எல்லையை கடந்தது ஃபானி புயல்... ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது

    சென்னை

    சென்னை

    வேலூர்- திருத்தணி பகுதியில் 43 முதல் 44 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையின் புறநகர் பகுதிகளில் 41 முதல் 42 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும்.

    கடல் காற்று

    சென்னையில் 40 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். பகல் நேரத்தில் அனல் காற்று இருந்தாலும் மாலை நேரங்களில் கடல் காற்றால் நாம் பிழைத்து விடுவோம்.

    சூரிய ஒளி

    சூரிய ஒளி

    இன்று கடல் காற்று கடும் அனலாக இருக்கும் என்பதால் வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். நேரடியாக சூரிய ஒளி உங்கள் மீது படுவதை தவிருங்கள்.

    தமிழகத்தில் திரும்பும்

    தமிழகத்தில் திரும்பும்

    ஃபனி புயல் நகர்ந்து விட்டதால் வடமேற்கில் இருந்து அனல் அடிக்கும் நிலக்காற்று தமிழக கடற்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு இழுக்கப்படுகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது . ராயசீமாவிலிருந்து அனல் காற்று தமிழகத்துக்கு திரும்பும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman says that As deadly Cyclone Fani moves up, 1st real sizzling day of summer for Tamil Nadu is expected in most parts of Tamil Nadu with most places expected to cross 40 C while Vellore-Tiruttanti belt is going to see 43-44 C from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X