சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டவன் காரணமா.. இல்லை ஆண்டவர்கள் காரணமா?.. #தவிக்கும்தமிழ்நாடு

தண்ணீர் பிரச்சனையால் தமிழகம் அல்லாடி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்..4000 ஹோட்டல்களை மூட முடிவு!

    சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீ்ர் இல்லாக் காடாக மாறி வருகிறது. மழை பொய்த்துப் போனதால் மண் வறண்டு பூமி உலர்ந்து உயிர்கள் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.

    தலைநகர் சென்னை நரகமாக மாறி வருகிறது. தண்ணீரைத் தேடி மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டுள்ளனர். இரவு, பகல் என்று கணக்கே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது தலைநகர் மக்கள் கூட்டம்.

    இந்த அளவுக்கு மோசமான வறட்சியை சென்னை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. ஏரிகள் வறண்டு விட்டன. கிணறுகளில் தண்ணீர் இல்லை. போர்வெல்கள் தூர்ந்து போய் வருகின்றன.

    தண்ணீர் பிரச்சினையை மக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் கவலையுடன் விவாதித்து வருகின்றனர். அதிலிருந்து சில...

    சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு! சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!

    ஆண்டவர்கள் காரணமா

    தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் ஆண்டவன் இல்ல; நம்மை ஆண்டவர்கள் தான் காரணம்!

    கடவுள் நன்கொடை

    தமிழகத்திலேயே வட கிழக்குப் பருவ மழை மற்றும் தென் மேற்குப் பருவ மழை ஆகிய இரண்டையும் பெறும் ஒரே மாவட்டம் நெல்லைதான் என்று சொல்கிறார் இவர். ஆனால் அங்கும் கூட வறட்சி இந்த முறை விட்டு வைக்கவில்லை.

    பிரதமரே நடவடிக்கை எடுங்க

    தமிழகம் தண்ணீரின்றி வாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே ஏதாவது நடவடிக்கை எடுங்கள். எங்கே போச்சு தேசிய நீர்வழிப் பாதை திட்டம்.

    மழை பெறுவோம்

    தமிழகம் முழுவதும் மரங்கள் நடுவதைத் தவிர வேறு தீர்வே இல்லை என்று சொல்கிறார் இவர்.

    மொத்தமும் வறண்டது

    சோழிங்கநல்லூர் பிராந்தியமே வறண்டு போயுள்ளது. எப்போதும் நீர்ப்பிடிப்புடன் காணப்படும் சதுப்பு நிலம் இது. இதுவே வறண்டு போய் விட்டது.

    நதிகளை இணையுங்கள்

    நாடு முழுவதும் நதிகளை இணைப்பது ஒன்றுதான் வறட்சியை ஒழிக்க ஒரே வழி என்று சொல்கிறார் இவர்.

    பார்த்து கத்துக்கங்க

    கேரளாவில் எப்படியெல்லாம் இயற்கைக்கு மதிப்பு தருகிறார்கள் என்பதை சொல்லும் வீடியோ இது. உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது. நாமும் அப்படி எப்போது மாறப் போகிறோமோ.

    English summary
    Summer Water shortage in Tamil nadu and Public tweet about the severe drought risk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X