சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: 14 மாவட்ட கவுன்சில்களில் திமுக; அதிமுகவுக்கு 13

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை முழுமையான முடிவுகள் தெரிய வரும்.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளிலும் திமுக கட்சிதான் முன்னிலை வகித்து வருகிறது.

Newest First Oldest First
10:06 AM, 18 Jan

மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-6; திமுக-1; இதர 3
10:06 AM, 18 Jan

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்திய பாஜக
10:05 AM, 18 Jan

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: 14 மாவட்ட கவுன்சில்களில் திமுக; அதிமுகவுக்கு 13
4:02 PM, 3 Jan

கன்னியாகுமரியில் 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுடன் பாஜக முதலிடம்!
3:43 PM, 3 Jan

கொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்..10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்
3:28 PM, 3 Jan

சேலம் மாவட்டத்தில் 39 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது பாமக
3:01 PM, 3 Jan

தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி - மு.க.ஸ்டாலின்
3:00 PM, 3 Jan

நாகை

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்திய பாஜக
12:44 PM, 3 Jan

314 ஊராட்சி ஒன்றியங்களில் 133-ல் திமுக; 128-ல் அதிமுக; அமமுக-1 வெற்றி; 52 ஒன்றியங்களில் இழுபறி
12:44 PM, 3 Jan

27 மாவட்ட கவுன்சில்களில் திமுக 14; அதிமுக 13 வெற்றி
12:30 PM, 3 Jan

திருப்பூர்:

மாவட்ட கவுன்சிலை கைப்பற்றிய அதிமுக; திமுக வசம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்
12:27 PM, 3 Jan

திருச்சி:

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-241; அதிமுக- 51; தேமுதிக-10; பாஜக-1; திமுக-146; சிபிஐ-2; காங்.-4. ; இதர -27
12:27 PM, 3 Jan

திருச்சி:

மாவட்ட கவுன்சிலர்கள் -24: அதிமுக-5; திமுக-18; காங்.1;
12:22 PM, 3 Jan

கிருஷ்ணகிரி:

அதிமுக- 59; தேமுதிக-9; பாஜக-1 திமுக-88; சிபிஐ-20; சிபிஎம்-1; காங்.-1. ; இதர -42
12:22 PM, 3 Jan

கிருஷ்ணகிரி:

மாவட்ட கவுன்சிலர்கள் -23: அதிமுக-6; திமுக-11; சிபிஐ-3; இதர-1
12:19 PM, 3 Jan

கரூர்:

மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-5; திமுக-1 .... ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-115 அதிமுக- 66; தேமுதிக-17; பாஜக-3 திமுக-33; காங்.-3. சிபிஎம்-1; இதர-9
12:17 PM, 3 Jan

கடலூர்

மாவட்ட கவுன்சிலர்கள் -29: அதிமுக-11; தேமுதிக-1 திமுக-11; இதர 3... ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-287: அதிமுக- 109; தேமுதிக-17; பாஜக-2 திமுக-82; காங்.-2 இதர- 75
12:16 PM, 3 Jan

அரியலூர்

மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-6; திமுக-1; இதர 3
12:15 PM, 3 Jan

அரியலூர்

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-113: அதிமுக- 35; தேமுதிக-4; திமுக-41; காங்.-2 இதர- 31
12:11 PM, 3 Jan

நீலகிரி, கன்னியாகுமரி உட்பட 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு
11:01 AM, 3 Jan

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி
10:05 AM, 3 Jan

2011-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 29-ல் வென்ற பாஜக தற்போது இதுவரை 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
9:50 AM, 3 Jan

ஈரோடு மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக
9:49 AM, 3 Jan

உள்ளாட்சி தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக. 81 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது தேமுதிக.
9:44 AM, 3 Jan

அரியலூர் மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக. அரியலூர் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11-ல் அதிமுக வெற்றி. அரியலூரில் 41 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக வெற்றி.
9:30 AM, 3 Jan

பெரம்பலூர் ஆதனூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற மணிவேல்(வயது 72) காலமானார்
8:46 AM, 3 Jan

உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது
8:29 AM, 3 Jan

திருமங்கலத்தில் திமுகவின் வெற்றியை அறிவிக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
8:29 AM, 3 Jan

ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக பாலச்சந்திரனின் வெற்றியை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்று புகார்
8:28 AM, 3 Jan

பூண்டி ஒன்றியத்தில் இரண்டு வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் புகார்
READ MORE

Vote counting for Local body election today Live Updates
English summary
Tamilnadu Local body elections Live: Vote counting to be begun on today at 8 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X