சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனித்தனி தேர்தல்.. சொதப்பிய அதிமுகவின் பிளான்.. மூத்த தலைகள் கோபம்.. அடுத்து என்ன நடக்கும்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் தனியாக தேர்தல் நடத்தும் அதிமுகவின் பிளான் அக்கட்சிக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் தனியாக தேர்தல் நடத்தும் அதிமுகவின் பிளான் அக்கட்சிக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன.

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

    தேர்தல்

    தேர்தல்

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதாவது நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக அப்போதே கூறப்பட்டது.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் இப்படி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதன் மூலம் தேர்தலில் முறைகேடு செய்ய அதிமுக முயன்று வருகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்ய அதிமுக முயல்கிறது என்று திமுக கூறியது .

    தேர்தல் திட்டம்

    தேர்தல் திட்டம்

    இதற்கு முன்னதாக லோக்சபா தேர்தலின் போதே 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடந்தது. அப்போது அதிமுக லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வென்றது. அதேபோல் செய்ய அதிமுக முயல்கிறது என்று திமுக குற்றச்சாட்டு வைத்தது.

    எளிதாக நடத்த திட்டம்

    எளிதாக நடத்த திட்டம்

    தேர்தலை எளிதாக நடத்தும் வகையில் இப்படி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவித்துள்ளது. இப்படி உள்ளாட்சி தேர்தலையும், மாநகராட்சி, நகராட்சி தேர்தலையும் தனியாக நடத்துவது அதிமுகவிற்கு பெரிய அளவில் உதவும். ஆளும் கட்சிக்கு இது அதிகமாக உதவும் என்று அப்போது கணிக்கப்பட்டது.

    கவனம் செலுத்தியது

    கவனம் செலுத்தியது

    அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் அதிமுக கவனம் செலுத்தியது. நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்பதால் அதிமுக அதன் மீது கவனம் செலுத்தவில்லை. இதனால் உள்ளாட்சிகளில் தங்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரையும் களமிறக்கி வேலை செய்தது.

    களமிறங்கியது

    களமிறங்கியது

    பெரும்பாலும் எம்எல்ஏக்களின் உறவினர்களை தேர்தலில் நிற்க வைத்தது. ஆளும் கட்சி என்பதால் உள்ளாட்சி அமைப்புகளை தேர்தலில் பணிகளை எளிதாக செய்தது. ஆனால் அதிமுகவின் அனைத்து திட்டங்களும் தவிடு பொடியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலை தனியாக நடத்தினால் வெல்லலாம் என்று அதிமுக நினைத்தது நடக்கவில்லை.

    திமுக வென்றது

    திமுக வென்றது

    அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் கடந்து திமுக வென்றுள்ளது. அதே சமயம் அதிமுக இந்த தேர்தலில் மிகவும் டஃப் பைட் கொடுத்துள்ளது என்றுதான கூற வேண்டும். இந்த கடும் போட்டி காரணமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் என்ன நடக்கும் என்றம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Tamilnadu Local body elections result: AIADMK plan of going with separate election failed in big time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X