சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலை தப்பியது.. பெரும் உற்சாகத்தில் திமுகவின் மூத்த தலைகள்.. கொண்டாட்ட மோடில் அறிவாலயம்!

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. இதனால் கட்சியில் உள்ள முக்கிய பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்கிறார்கள்.

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தத்தில் இரண்டிலும் திமுக கூட்டணிதான் 50%+ இடங்களை வென்றுள்ளது.

    ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி.. அதிமுக கூட்டணியும் அபாரம்ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி.. அதிமுக கூட்டணியும் அபாரம்

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். முக்கியமாக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் குறிப்பிட்டார்.

    எப்படி லோக்சபா தேர்தல்

    எப்படி லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தலுக்கு முன்பும் திமுக தலைவர் ஸ்டாலின் இதேபோல் திமுகவில் முக்கியமான உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கினார். அதேபோல் முக்கியமான பொறுப்புகளுக்கு வேறு நபர்களை நியமித்து அதிரடியாக செயல்பட்டார். அதேபோல் மறுபடியும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், ஏன் திமுகவே கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வகையில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.இதனால் திமுகவின் மூத்த தலைகள் பெரும் சந்தோசத்தில் இருக்கிறார்கள். ஸ்டாலினின் நடவடிக்கைக்கும் கோபத்திற்கு ஆளாக வேண்டியது இல்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    ஸ்டாலின் கோபம்

    ஸ்டாலின் கோபம்

    மத்திய அரசின் ஆதரவும், அதீத அதிகாரமும் ஆளும் அதிமுகவிற்கு இருக்கிறது. இதற்கு எதிராக ஸ்டாலின் மட்டும் போராட முடியாது. அதனால்தான் அவர் மாவட்ட செயலாளர்களிடம் மிகவும் கோபமாக கண்டிப்புடன் செயல்படுகிறார் . அந்த கண்டிப்பு தற்போது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

    திமுக அலுவலகம்

    திமுக அலுவலகம்

    இதனால் தமிழகம் முழுக்க திமுகவின் தலைவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். அதே சமயம் கொங்கு மாவட்டங்கள், வடக்குமாவட்டங்களில் திமுக மீண்டும் சறுக்கி உள்ளது. முக்கியமாக தூத்துக்குடியில் திமுக மோசமாக சறுக்கி உள்ளது. இந்த சறுக்கல்கள் தொடர்பாக திமுக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    எப்படியோ ஓகே

    எப்படியோ ஓகே

    அதேபோல் திமுகவில் நிலவி வந்த கோஷ்டி மோதல் இதனால் சரியாகும் என்றும் கூறுகிறார்கள். யாருக்கு என்ன பொறுப்பு , யார் என்ன செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.இதனால் சட்டசபை தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயார் ஆகும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Tamilnadu Local body elections: DMK cadres are happy with the party's performance and come back.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X