சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வாதிகாரியாக மாறுவேன்.. ஸ்டாலினின் அந்த ஆக்ரோஷமான பேச்சு.. திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்! - வீடியோ

    சென்னை: திமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில வாரம் முன் கோபமாக பேசினார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற அந்த பேச்சுதான் காரணம் என்கிறார்கள்.

    கடந்த நவம்பர் 10ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய சில விஷயங்கள்தான் தற்போது திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தலின் போது உதவி உள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியில் முக்கிய உறுப்பினர்களை ஸ்டாலின் நீக்கியதுடன், பலரின் பதவிகளை மாற்றினார். அதேபோல் பலரின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். இதனால் லோக்சபா தேர்தலில் திமுக எளிதாக வென்றது.

    தூக்கத்தை துறந்த ஸ்டாலின்... விடிய விடிய நிர்வாகிகளிடம் களநிலவரங்களை கேட்டறிந்தார் தூக்கத்தை துறந்த ஸ்டாலின்... விடிய விடிய நிர்வாகிகளிடம் களநிலவரங்களை கேட்டறிந்தார்

    அதே பார்முலா

    அதே பார்முலா

    அதே பார்முலாவை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலுக்கும் செயல்படுத்தினார். நவம்பர் 10ல் நடந்த திமுக கட்சியின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் மிக கடுமையாக திமுக கட்சி நிர்வாகிகளை விமர்சித்தார். நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததற்கு செயலாளர்கள் இடையே ஒற்றுமை இல்லாததுதான் காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்று இருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    பல முக்கிய உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் வேலை பார்க்கவில்லை. லோக்சபா தேர்தலின் வெற்றி மிதப்பில் இருந்தனர் என்று புகார் சென்றுள்ளது. இதேபோல் உள்ளாட்சி தேர்தல் நடக்க கூடாது என்பதில் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இருந்தார். இதைத்தான் ஸ்டாலின் பொதுக்குழு பேச்சின் போதும் குறிப்பிட்டார்.

    ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள்ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள்

    கோபமான பேச்சு

    கோபமான பேச்சு

    பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய போது, கட்சியில் சிலர் திருந்த வேண்டும். தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள். நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.

    சர்வாதிகாரி பேச்சு

    சர்வாதிகாரி பேச்சு

    உள்ளாட்சி தேர்தலில் வென்றால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெல்ல முடியும். அதனால் எப்படியாவது இதில் தீவிரமாக செயல்பட்டு வெற்றிபெற வேண்டும்.யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று திமுக நிர்வாகிகள் கருத கூடாது. கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக என்று ஸ்டாலின் பேசி இருந்தார்.

    எப்படி இப்படி

    எப்படி இப்படி

    ஸ்டாலினின் இந்த கோபமான பேச்சுதான் திமுக உறுப்பினர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. மேலிடத்தின் நடவடிக்கைக்கு முன் கட்சியில் செயலாற்ற வேண்டும் என்று மிகவும் தீவிரமாக உறுப்பினர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக அடிமட்ட உறுப்பினர்கள் கட்சியில் தேர்தலுக்காக மிக தீவிரமாக பணியாற்றி உள்ளனர்.

    கோஷ்டி தகராறு

    கோஷ்டி தகராறு

    திமுகவின் அடிமட்ட உறுப்பினர்கள் இடையே தேர்தல் நேரத்தில் அவ்வப்போது தகராறு ஏற்படும். கோஷ்டி மோதல் ஏற்படும். அந்த மோதல் இந்த முறை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன வெற்றி

    என்ன வெற்றி

    அதன் பலனாக தற்போது ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 50+ இடங்களையும் கிட்டத்தட்ட திமுக வென்றுவிட்டது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் ஏற்கனவே 50+ இடங்களை திமுக கைப்பற்றிவிட்டது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று கூறலாம்.

    கிடைத்துவிட்டது

    கிடைத்துவிட்டது

    அனைத்தையும் என்னால் சமாளிக்க முடியும். நான் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருவது உங்களுக்கு தெரியும்.என்னுடைய சக்திக்கு மீறி நான் வேலை பார்த்து வருகிறேன். வெற்றி சாதாரணமாக கிடைக்காது; கிடைக்கவும் விட மாட்டார்கள், என்று ஸ்டாலின் நவம்பர் 10ம் தேதி குறிப்பிட்டு இருந்தார். தற்போது பெரும் போராட்டத்திற்கு பின் ஸ்டாலின் அந்த வெற்றியை ருசித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Local body elections: M K Stalin speech in DMK meet on November is the important reason for its victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X