சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4%ல் இருந்து 10%த்தை தொட்டுவிட்டோம்.. 2021ல் நடப்பதை பாருங்கள்.. நாம் தமிழர் சீமான் நம்பிக்கை!

நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது ஆனால் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகளை பெற்றுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது ஆனால் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகளை பெற்றுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதே சமயம் மக்கள் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது.

    பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் நாம் தமிழர் பெரிய அளவில் பண பலம் இல்லாமல் தேர்தலை சந்தித்து, அதில் சாதித்துள்ளது. இந்த தேர்தல் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்..

    சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    சீமான் தனது பேட்டியில், 2021 சட்டசபை தேர்தலை வலிமையாக நாங்கள் எதிர்கொள்வோம். தமிழ் தேசிய இன மக்கள் கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்போம். என் இன மக்களின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவுகளை எடுப்போம். இன்று அதை பற்றி நான் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பேன். இன்று பொதுக்குழு நடக்கிறது.

    2021 தேர்தல்

    2021 தேர்தல்

    2021ல் பெரிய மாற்றம் வரும். 2021ல் போட்டியிடுகிற வேட்பாளர்களை இந்த மாதமே தேர்வு செய்வோம். ஒன்றரை வருடம் தேர்தலுக்கு உழைக்க போகிறோம். எல்லா வேட்பாளர்களும் சாலை சாலையாக சென்று, எல்லா வீடுகளிலும் அடுத்த மாதத்தில் இருந்து பிரச்சாரம் செய்வார்கள்.

    பெண்கள்

    பெண்கள்

    117 பெண்கள், 117 ஆண்கள் என்று தேர்வு செய்து சமமாக போட்டியிட வைப்போம். பெண்களுக்கு சமமாக வாய்ப்பு அளிப்போம். லோக்சபா தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். சாதி பணம் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்று இருக்கிறோம்.

    என்ன வளர்ச்சி

    என்ன வளர்ச்சி

    நீங்கள் அதை பார்க்க வேண்டும். கிராமங்களில் எல்லாம் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறோம். எங்களின் வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது. ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி 10% வாக்குகளை பெற்றுள்ளது. நாங்கள் வேகமாக வளர்கிறோம்.

    பஞ்சாயத்து தலைவர்

    பஞ்சாயத்து தலைவர்

    120 பஞ்சாயத்து தலைவர் வென்றுள்ளனர். வார்டு உறுப்பினர்கள் என்று பல இடங்களில் வென்று இருக்கிறோம். அதை யாரும் பேசுவது இல்லை. ஒன்றிய உறுப்பினராக குமரியில் சுனில் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பிவிட்டார்கள்.

    திமுக ஏமாற்றம்

    திமுக ஏமாற்றம்

    மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இதற்கு முன் சிஏஏவை திமுக ஆதரித்தது. 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது, என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    Take a Poll

    English summary
    Tamilnadu Local body elections: Naam Tamilar party improving so fast says Seeman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X