தமிழ்நாடு ஞாயிறு ஊரடங்கு.. இன்று வெளியே செல்கிறீர்களா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஞாயிறு லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் தினசரி கேஸ்கள் 2 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது திடீரென கேஸ்கள் 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பொங்கலுக்கு பின்பு கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 7 கோடி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் வருடம் நாட்களில் கேஸ்கள் மேலும் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilnadu Lockdown: ஞாயிறு ஊரடங்கு.. தமிழ்நாட்டில் இன்று எதற்கெல்லாம் தடை.. எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாடு லாக்டவுன்
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் தினசரி கேஸ்கள் 50 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்புகளும் உள்ளது. ஜனவரி இறுதியில் தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கேஸ்கள் பதிவாகும் என்று ஐஐஎஸ்டி அறிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா கேஸ்கள் இந்த அளவிற்கு உச்சம் பெறுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா கேஸ்கள்
இன்று தமிழ்நாடு முழுக்க 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமான சாலைகளில், சாலை சந்திப்புகளில் போலீசார் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியே தேவையின்றி சுற்றும் மக்களை பிடித்து அவர்களை விசாரிக்கும் பணிகளை போலீசார் செய்து வருகிறார்கள். அதிகாலையில் இருந்து இதற்காக போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

மருத்துவ தேவை
அதன்படி வெளியே செல்லும் மக்கள் திருமணத்திற்கு செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் திருமண பத்திரிக்கை இருக்கிறதா என்று போலீசார் செய்து வருகின்றன. மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களிடம் அதற்கான மருந்து சீட்டுகள் இருக்கின்றனவா என்றும் சோதனை செய்து வருகின்றன. காய் கறிக்கடை, இறைச்சிக் கடைகளுக்கு செல்பவர்களை அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஞாயிறு ஊரடங்கு
மாஸ்க் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு இன்று போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அத்தியாவசிய காரணம் இன்றி வெளியே சுற்றும் மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோன கேஸ்கள் 30 ஆயிரத்தை கடந்து உள்ள நிலையில் போலீசார் கட்டுப்பாடுகளை உயர்த்தி உள்ளனர்.

பின்பற்ற வேண்டிய விதிகள்
இந்த நிலையில் இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் பின்வரும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1. தேவையற்ற காரணங்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
2. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு செல்பவர்கள் பத்திரிகையுடன் செல்லவும்.
3. மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்கள் உரிய சான்றிதழோடு செல்லவும்.
4. கட்டாயம் மாஸ்க் அணியவும்.
5. ரயில், விமான நிலையங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6. நீண்ட தூரம் பயணம் செய்ய வாடகை வாகனங்களை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.