சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Tamilnadu Lockdown: ஞாயிறு ஊரடங்கு.. தமிழ்நாட்டில் இன்று எதற்கெல்லாம் தடை.. எதற்கெல்லாம் அனுமதி?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 1,94,697 பேர் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். தினசரி கொரோனா கேஸ்கள் 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 30,744 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா ஓமிக்ரான் வைரஸ் நோய்த் - தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

அமெரிக்கா, இத்தாலியில் புதிய உச்சம்.. விடாமல் துரத்தும் ஓமிக்ரான்.. கட்டுக்குள் வராத கொரோனா 3ம் அலை!அமெரிக்கா, இத்தாலியில் புதிய உச்சம்.. விடாமல் துரத்தும் ஓமிக்ரான்.. கட்டுக்குள் வராத கொரோனா 3ம் அலை!

ஞாயிறு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே தடை செய்யப்பட்ட அன்று அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.

தமிழ்நாடு லாக்டவுன்

தமிழ்நாடு லாக்டவுன்

வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள லாக்டவுன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று லாக்டவுனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சேவைகள்

தடை செய்யப்பட்ட சேவைகள்

மாநிலம் முழுக்க 70 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று எதற்கெல்லாம் தடை

அத்தியாவசியம் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் தடை

பொது பேருந்து போக்குவரத்து சேவை இன்று இயங்காது.

தியேட்டர்கள், மதுபான கடைகள், மத வழிபாட்டு மையங்கள் இயங்காது

கேளிக்கை தொடர்பான சேவைகள் இயங்காது

மற்ற நாட்களில் நிலவும் கட்டுப்பாடுகள் எப்போதும் போல தொடரும்.

அனுமதிக்கப்பட்ட சேவைகள்

அனுமதிக்கப்பட்ட சேவைகள்

இன்று எதற்கெல்லாம் அனுமதி

தமிழ்நாட்டில் கடந்த வாரங்களை போல இல்லாமல் இந்த வாரம் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும். கடந்த வாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சனிக்கிழமை இறைச்சி, காய்கறி கடைகளுக்கு போனதால் இந்த முறை ஞாயிறு அன்று இந்த வாரம் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்திவாசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்கும்

திருமணத்திற்கு செல்வோர் பத்திரிக்கைகளுடன் செல்ல வேண்டும்

உணவு கூடங்கள் செயல்படும். ஆனால் பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.

பெட்ரோல் பங்குகள் செயல்படும்.

English summary
Tamilnadu Lockdown: What are the things that are allowed and not allowed during today's Sunday curfew in the state?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X