சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் 4 மிக முக்கியமான தளர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா லாக்டவுன் தொடர்பாக முக்கியமான 4 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 4 முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    நாடு முழுக்க அன்லாக் 4.0 தளர்வுகளை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த அன்லாக் 4.0 தளர்வுகள் அமலுக்கு வருகிறது. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு லாக்டவுன் அமலில் இருக்கும்.

    இதில் அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது லாக்டவுன் தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

    தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!

    செப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்புசெப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்பு

    செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்

    பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிப்பு..புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இல்லை முழு லிஸ்ட்பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிப்பு..புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இல்லை முழு லிஸ்ட்

    தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!

    தமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்புதமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு

    மருத்துவ குழு என்ன சொன்னது

    மருத்துவ குழு என்ன சொன்னது

    தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகளை கொண்டு வருவது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் ஆலோசனை செய்தார். மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார். இதில் சில முக்கியமான ஆலோசனைகளை மருத்துவ குழு தமிழக முதல்வருக்கு வழங்கி உள்ளது. முக்கியமான தளர்வுகளை கொண்டு வர அனுமதி அளித்துள்ளது.

    தளர்வு 1 என்ன?

    தளர்வு 1 என்ன?

    தமிழக அரசு கொண்டு வரப்பட்டு இருக்கும் முதல் தளர்வு இ - பாஸ் ஆகும். தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும். மக்கள் அதிகம் எதிர்பார்த்த தளர்வு ஆகும் இது கர்நாடகா, புதுச்சேரியில் இ பாஸ் முறை அமலில் இல்லை. இதனால் தமிழகத்திலும் இதை பின்பற்ற வேண்டியது இல்லை என்று மருத்துவ குழு, ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    தளர்வு 2 என்ன ?

    தளர்வு 2 என்ன ?

    அதேபோல் இரண்டாவது தளர்வு பேருந்து போக்குவரத்து. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், செயல்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

     சின்ன சின்ன தளர்வுகள்

    சின்ன சின்ன தளர்வுகள்

    இது போக இன்னும் சில சிறிய சிறிய தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இனி ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் இருக்க கூடாது என்று மத்திய அரசு கூறிய காரணத்தால், இனி, ஞாயிறுக்கிழமை லாக்டவுன் இருக்காது.

    கடைகள் எப்படி

    கடைகள் எப்படி

    தமிழகத்தில் இருக்கும் பெரிய பெரிய கோவில்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் கூடுதல் கடைகள், மார்க்கெட்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அலுவலகங்களை மீண்டும் திறக்க ஊக்குவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். முழு வீச்சில் பொருளாதார ரீதியாக சென்னையை மீட்டு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    வேறு வழிகாட்டுதல்

    வேறு வழிகாட்டுதல்

    திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

    தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

    திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

    மெட்ரோ எப்படி

    மெட்ரோ எப்படி

    பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

    English summary
    Tamilnadu may go two big relaxations today after centers Unlock 4.0 announcement yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X