சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ்காரர் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை.. தடாலடி முடிவை திரும்ப பெற்ற முகவர்கள் சங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ்காரர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவை பால் முகவர்கள் சங்கம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியதாவது:

Tamilnadu Milk distributors withdraws decision of not giving milk to policemen

அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதால், பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என்று அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை வேலை செய்யவிடாமல் போலீஸார் வாகனங்களைப் பறிமுதல் செய்கிறார்கள்.

பால் விநியோக மையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனப் பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருகிறார்கள். இதுவரை எந்த ஒரு தீர்வும் இல்லாததால் இன்று முதல் காவல் துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல் துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவை திரும்ப பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில், பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால் காவல் துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவை நேற்று காலை வெளியிட்டேன்.

 சாத்தான்குளம்.. ரஜினி ஏன் வாயே திறக்காமல் அமைதியாக உள்ளார்.. மனசை உலுக்கவில்லையா.. மக்கள் கேள்வி! சாத்தான்குளம்.. ரஜினி ஏன் வாயே திறக்காமல் அமைதியாக உள்ளார்.. மனசை உலுக்கவில்லையா.. மக்கள் கேள்வி!

Recommended Video

    பைப்புல பால் ஊத்தினா போதும் சர்ர்ர்னு கின்னத்துல போய் விழும்.. ராஜஸ்தான் பால் வியாபாரி புதுமை!

    சென்னை பெருநகர காவல் ஆணையரை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசியதன் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு பால் விநியோகம் இல்லை என்ற முடிவை திரும்ப பெறுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Milk distributors withdraws decision of not giving milk to policemen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X