• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னை டூ செந்தூர் ... அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம்.. கலக்கும் ஸ்டாலின் அமைச்சரவை

|

சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கும் நிலையில், அவரது அமைச்சரவை அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 133 இடங்களில் திமுக வென்றது. அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழக ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

பெரிய சவால்.. முக்கியமான துறைகளுக்கு ஸ்டாலின் அடித்த பெரிய சவால்.. முக்கியமான துறைகளுக்கு ஸ்டாலின் அடித்த "அப்பாயிண்ட்மெண்ட்".. இவங்க 4 பேர் முக்கியம்!

அமைச்சரவை பட்டியல்

இந்நிலையில், அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2006ஆம் ஆண்டில் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் 15 பேருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மண்டல வாரியாகவும் சரி சமமான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளது.

 வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

  • வேலூர் -1 அமைச்சர்
  • ராணிப்பேட்டை -1 அமைச்சர்
  • காஞ்சிபுரம் -1 அமைச்சர்
  • திருவள்ளூர் -1 அமைச்சர்
  • திருவண்ணாமலை -1 அமைச்சர்
  • கடலூர் -2 அமைச்சர்கள்
  • விழுப்புரம் -2 அமைச்சர்கள்
கொங்கு

கொங்கு

  • திருப்பூர் -2 அமைச்சர்கள்
  • நாமக்கல் -1 அமைச்சர்
  • ஈரோடு -1 அமைச்சர்
  • கரூர் - 1 அமைச்சர்
  • நீலகிரி -1 அமைச்சர்
  • திண்டுக்கல் - 2 அமைச்சர்கள்
தெற்கு

தெற்கு

  • சிவகங்கை -1 அமைச்சர்
  • கன்னியாகுமரி -1 அமைச்சர்
  • ராமநாதபுரம் -1 அமைச்சர்
  • மதுரை -2 அமைச்சர்கள்
  • விருதுநகர் -2 அமைச்சர்கள்
  • தூத்துக்குடி -2 அமைச்சர்கள்
மத்தி

மத்தி

  • அரியலூர் - 1 அமைச்சர்
  • திருச்சி -2 அமைச்சர்கள்
  • புதுக்கோட்டை -2 அமைச்சர்கள்
  • என அனைத்து மண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் பெற்றே அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

English summary
All region gets a fair share in Stalin's Ministery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X