சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட கடலோர மாவட்டங்கள், கோவை, சேலத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் குஷி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .

Tamilnadu north coastal districts will get rain in 24 hours: Chennai meteorological department

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் ( மரக்காணம் ) 5 சென்டிமீட்டர் மழை அளவும், மேட்டூர், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, குப்பநத்தம் பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் தொழுதூர், வேலூர் மாவட்டம் பொன்னை அணை பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டரும் பெய்துள்ளது.

கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜூலை 1 முதல் 5 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
Heavy rainfall in Tamil Nadu will be experienced in the north coastal districts and Coimbatore, Dharmapuri, Salem, and Puduvai and Karaikal areas. The sky is generally cloudy over the next 24 hours, with light to moderate rainfall in a few parts of the Chennai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X