சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு மிக அருகே.. இன்னும் 3 நாளில்.. ஒரு பக்கம் ரெட் அலர்ட், இன்னொரு பக்கம் புயல்..கவனம் மக்களே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு வரும் 25ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உச்சம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இடையில் சில நாட்கள் மழை விட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை சூடுபிடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது வழக்கத்தை விட சென்னையில் அதிக மழை பெய்தது. அதேபோல் தூத்துக்குடி, குமரி போன்ற தெற்கு மாவட்டங்களிலும் மழை பிச்சு எடுத்தது.

நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் அருகே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம் நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் அருகே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம்

 மழை எப்படி

மழை எப்படி

இந்த நிலையில் தமிழகத்தில் நாளையில் இருந்து மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை ஆய்வு மையம் மொத்தம் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.

விஷயம் 1- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

விஷயம் 2 -மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது.

சிக்கல்

சிக்கல்

வரும் 25ம் தேதிதான் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க உள்ளது. அதே நாளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தாழ்வு பகுதியாக வழுவெடுத்து, புயலாக மாறி மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும்.

மோசம்

மோசம்

இன்னொரு பக்கம் தமிழகத்தில் இதனால் அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 24ம் தேதி இரவில் இருந்து 25ம் தேதி வரை தமிழகத்தில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றும் அதிகமாக வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று

காற்று

இந்த புயல் சென்னைக்கு அருகே கரையை கடப்பதால் சென்னையில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அருகே புயல் செல்லும் போது அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலுக்கு பின்பும் மழை பெய்யும். அதேபோல் சென்னையை சுற்றி இருக்கும் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்கள்

கடலோர மாவட்டங்கள்

ரெட் அலெர்ட் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடல் லேசான கொத்தளிப்புடனும், காற்றின் வேகம் 50 கிமீ அதிகமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 25ம் தேதி கடுமையான கனமழை பெய்யும் என்று கூறுகிறார்கள்.

மக்கள் கவனம்

மக்கள் கவனம்

மழை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் ஏரிகள் ஏற்கனவே கிட்டதட்ட முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால ஏரிகளை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

மக்கள் பாதுகாப்பு

மக்கள் பாதுகாப்பு

இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பெரிய மழைக்கு ஏற்றபடி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மகாபலிபுரம் அருகே கடலோர பகுதியில் இருக்கும் மக்கள் புயலுக்கு ஏற்றபடி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu people has to be safe amid red alert and cyclone on November 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X