சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நங்கநல்லூரில் 120 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்பிஐ காலனி 2-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). தொழிலதிபரான இவர் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இவருடைய மனைவியும் பிள்ளைகளுமே இருந்தனர். இவர்களும் வீட்டை பூட்டி கொண்டு நேற்று முன் தினம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்

சம்பவ இடம்

சம்பவ இடம்

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 120 பவுன் நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ 1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

வீட்டுச் சுவர்

வீட்டுச் சுவர்

அப்போது அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 வடமாநில இளைஞர்கள் நேற்று முன் தினம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிவதும், ரமேஷின் வீட்டுச் சுவர் ஏறி குதித்ததும் தெரியவந்தது.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

கையில் ஒரு பையுடன் மீண்டும் சுவர் ஏறி குதித்து வெளியேறும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதையடுத்து வடமாநில இளைஞர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் சென்னை புறநகரில் பணியாற்றும் வடமாநில கட்டட தொழிலாளிகள், ஓட்டல்களில் பணியாற்றும் தொழிலாளர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை

விசாரணை

இதில் 120 சவரன் நகைகளை கொள்ளை சம்பவத்தில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். அவர்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த பவேரியாக்கள்

யார் இந்த பவேரியாக்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நாடு முழுவதும் குற்றப்பரம்பரையின் கீழ் பவேரியாக்கள் உள்ளிட்ட இனங்கள் இருந்தன. இவர் காடு, மலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக ஈவு இரக்கமின்றி மூர்க்கத்தனமாக தாக்குபவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் குறித்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Police arrest 6 Bawariya tribes those who looted 120 sovereigns at Nanganallur, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X