சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'இந்த லிங்கை மட்டும் தொட்டுவிடாதீர்கள்'.. டேட்டிங் முதல் வேலை வரை.. திகைக்க வைக்கும் சம்பவங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : அமேசானில் வேலை, பிளிப்கார்டில் வேலை, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று வரும் எந்த எஸ்எம்எஸ்களையும் தயவு செய்து கிளிக் செய்துவிடாதீர்கள். இதேபோல் ஹெச்எடிஎப்சி,ஐசிஐசிஐ, எஸ்பிஐ, என வங்கிகளின் பெயரை போலவே ஆனால் தவறான ஸ்பெல்லிங்கில் வரும் கடன்,ஆபர், தள்ளுபடி எஸ்எம்எஸ்களையும் கிளிக் செய்யாமல் டெலிட் செய்துவிடுங்கள்.

ஏனெனில் அப்பாவி மக்களை குறிவைத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய மோசடிகள் நடந்து வருகிறது. மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாம், தினமும இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று வரும் மோசடியாக லிங்குகளையும் ஒரு நாளும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

பணத்தை பாக்கெட்டில் வைத்திருந்தோம். பிட்பாக்கெட் அடித்தார்கள்.இப்போது டிஜிட்டல் வழியாக வங்கியில் வைத்திருக்கும். அதையும் பிட்பாக்கெட் அடிக்க ஏராளமான இணையவழி திருடர்கள் காத்திருக்கிறார்கள். 10 ரூபாயை சாலையில் போட்டு சார் உங்கள் பணம் கீழே கிடக்குது பாருங்கள் என்று சொல்லி பர்சை திருடுவது ஒரு காலம்.

பேராசிரியர் அன்பழகன் பேனாவில் கையெழுத்து... ராஜேஷ்குமாருக்கு இந்த பேனா கிடைத்தது எப்படி..?பேராசிரியர் அன்பழகன் பேனாவில் கையெழுத்து... ராஜேஷ்குமாருக்கு இந்த பேனா கிடைத்தது எப்படி..?

எம்எம்எஸ் மோசடி

எம்எம்எஸ் மோசடி


அதே திருடர்கள், நம் ஆசையை தூண்டும் வகையில் பிளிப் கார்டில் 50000 போன் 5000 ரூபாய் உங்களுக்கு என்றே ஆபர் வந்துள்ளது. அமேசானில் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை...பிளிப்கார்டில் உங்களுக்கு காத்திருக்கும் வேலை ஆர்டர், வேலையில் சேர தயாரா என்றெல்லாம் குறிவைத்து மோசடியான லிங்குகளை எம்எஸ்எஸ் மூலம் அனுப்புகிறார்கள். பல்க் எஸ்எம்எஸ் மூலம் பல ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் வரும் விளம்பரங்களை தொட்டால் உங்கள் கணக்கில் பணம் காலியாகிவிடும். அல்லது உங்களை மூளைச்சலவை செய்து சிறிது சிறிதாக பணத்தை பறிப்பார்கள்.

இஸியாக சம்பாதிக்கலாம்

இஸியாக சம்பாதிக்கலாம்

இதேபோல் இஸியாக பணம் சம்பாதிக்கலாம் அல்லது உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களில் வரும் எஸ்எம்எஸ்களுக்கு மரியாதை கொடுத்து திறந்து பார்த்தால் உங்கள் பர்சை மட்டுமல்ல, உங்கள் அந்தரங்க விவகாரங்களைம் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நிலை ஏற்படலாம் எனவே இதை அறவே தவிர்ப்பது நல்லது.

பணம் சம்பாதிக்கலாம்

பணம் சம்பாதிக்கலாம்

அண்மைகாலமாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிரபல நிறுவனங்கள் பெயரில் தகவல் அனுப்புகிறார்கள். இதில், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடி நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் செல்போனில் டவுன்லோடு ஆகிறது. பிறகு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது டெலிகிராம் மூலமாகவோ மோசடி நபர்கள் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அறிவுரைகள் கொடுத்து குறிப்பிட்ட ஆப் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதற்கான வழிமுறைகளை சொல்லி கொடுக்கிறார்கள்.

எப்படி மோசடி

எப்படி மோசடி

அவர்கள் கூறியடி அந்த ஆப் இணைந்தவுடன் ஒரு போனஸ் தொகை ரூ.101 பயனாளியின் கணக்கிற்கு வந்துள்ளதாக அந்த ஆப் காட்டும். அடுத்து மோசடி நபர்கள் பயனாளியை அந்த ஆப்பிலிருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுவார்கள். அதற்கான, கமிஷன் தொகை பயனாளிக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். அவ்வாறு பொருளை வாங்குவதற்கு மக்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர் கூறுகின்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும். ஆனால் பொருளை விற்ற பிறகு கிடைக்கின்ற பணம் மற்றும் கமிஷன் தொகை பயனாளியின் வங்கி கணக்கிற்கு வருவதில்லை.

மக்களே உஷார்

மக்களே உஷார்

அதற்கு மாறாக அந்த ஆப்பில் பணம் உள்ளதாக காட்டும். அப்படி அந்த ஆப்பில் காட்டும் பணத்தை எடுக்க பயனாளிகள் தங்களது வங்கி கணக்கை இணைக்கும் போது மோசடி நபர்கள் பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே, தற்போது 'HONEY' மற்றும் 'MAKING' என்ற பெயரில் உள்ள ஆப்களை மக்களிடம் பயன்பாட்டில் மோசடி நபர்கள் விட்டு அதன் மூலம் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற ஆப்புகளை செல்போனில் டவுன் லோட் செய்ய வேண்டாம். என்று போலீசார் எச்சரித்தனர்.

ஜாக்கிரதை மக்களே

ஜாக்கிரதை மக்களே

இந்நிலையில் அமேசான் பார்ட் டைம் வேலை தருவதாகவும் தினமும் 3000 ரூபாய் முதல் 10000 வரை சம்பாதிக்கலாம் என்று ஒரு எஸ்எம்எஸ் வருகிறது. இப்படி வரும் எஸ்எம்எஸ்சின் படி நீங்கள் வாட்ஸ் அப் செய்தால் உங்கள் தகவல் , அந்தரங்க விவகாரங்கள் திருடப்படும் என ஜாக்கிரதையாக இருங்கள்.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இதை போல் உங்களுக்கு வங்கியில் தனிநபர் கடன் காத்திருக்கிறது. 48 மணிநேரத்தில் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும். வட்டி வெறும் 10.25 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது என்று பிரபல வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது எஸ்பிஐ, ஹெச்எடிஎப்சி பெயரை உள்ளே குறிபிட்டு தவறான லிங்கை அனுப்புவார்கள். அதை கிளிக் செய்து உள்ளே போனால் உங்கள் தகவல் திருடப்பட்டு பணம் காலியாகிவிடும் ஜாக்கிரதை மக்களே. இதேபோல் 25000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர் என்றால் உங்களுக்கு தனிநபர் கடன் 20 லட்சம் வரை காத்திருக்கிறது. உங்களுக்கு நல்ல செய்தி என்று வரும் லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள்.

ரம்மி விளையாடலாம்

ரம்மி விளையாடலாம்

இதேபோல் ரம்மி விளையாடலாம், உங்ளுக்கு பணம் கிடைக்கும். உங்களுக்கு ஆபர் என்று ஆசையை தூண்டி எஸ்எம்எஸ் வரும் அதையும் தயவு செய்துகிளிக் செய்யாதீர்கள். அப்படி கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்கள் வங்கி கணக்கில் பணத்தை இழக்க நேரிடும். இதேபோல் டேட்டிங் செய்யலாம் வாங்க, இந்த நம்பரை கிளிக் பண்ணுங்க என்றும் மோசடி வலை விரித்து உங்கள் பணத்தை பறித்துவிடுவார்கள்.

எப்படி திருடுவார்கள்

எப்படி திருடுவார்கள்

எல்லாம் சரி.. பணம் எடுக்க ஒடிபி வேண்டுமே எப்படி இவை எல்லாம் சாத்தியம் ஆகும் என்று கேட்கலாம். நீங்கள் லிங்கை கிளிக் செய்தால் உங்கள் செல்போனை ஹேக் செய்வது அவர்களுக்கு எளிது. உங்கள் செல்போனுக்கு வரும் ஒடிபியை அவர்கள் பார்ப்பதும் எளிது. அப்படி ஹேக் செய்ய முடியாவிட்டால், உங்கள் தகவல்களை திருடி மிரட்டுவார்கள். இல்லாவிட்டால் வங்கியின் பெயரில் பேசி உங்களின் ஓடிபியை வாங்கிவிடுவார்கள். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் மக்களே. ஏமாற்றம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். விழிப்பாக இருங்கள்.

English summary
tamilnadu cyber crime police important alert for new sms and job links. Work on Amazon, work on Flipkart, please do not click on any incoming SMS saying click this link.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X