சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வாரத்தில்.. அடுத்தடுத்த ஆக்சன்.. வேகம் காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. அடுத்த செக் யாருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு கைதுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள், அவதூறு புகார்கள் என்று தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி கைதுகளை மேற்கொண்டு வருகின்றது.

Recommended Video

    YouTubers-க்கு அடுத்தடுத்த செக்... தொடரும் ஆக்சன்ஸ்.. பின்னணி

    தமிழ்நாடு போலீஸ் முன்பு எப்போதும் இருந்ததை விட தற்போது துரிதமாக செயல்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக சிபிசிஐடி போலீசார் மிக கடினமான வழக்குகளில் கூட உடனுக்குடன் துப்பு துலக்கி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்து உள்ளது,

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், சிவசங்கர் பாபா, பப்ஜி மதன் என்று அதிரடி கைதுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கைதுகள் எல்லாம் சிறப்பான ஆபரேஷன் மூலம் செய்யப்பட்ட கைதுகள் ஆகும்.

    ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை என உறுதி ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை என உறுதி

    சாட்டை துரைமுருகன்

    சாட்டை துரைமுருகன்

    முதலில் திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உட்பட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். காலையில் இவர் கட்டப்பஞ்சாயத்து செய்த நிலையில் இரவே போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் வரிசையாக பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்.

    கிஷோர் கே சாமி

    கிஷோர் கே சாமி

    இதுபோக இன்னொரு பக்கம் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இவரும் தொடர்ந்து திமுக தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சில சினிமா துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் என்று பலரை தவறாக பேசி வந்தார். முதலில் திமுக தலைவர்களை தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரும் வழக்காக பதியப்பட்டுள்ளது.

    தொடர்ந்து

    தொடர்ந்து

    இவர் மீது நடிகை ரோகினியும் புகார் அளித்துள்ளதால், இவருக்கு எதிரான பல்வேறு புகார்கள் தோண்டி எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இன்னொரு பக்கம் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.

    துருப்பு

    துருப்பு

    டெல்லியில் சுற்றி வந்த இவரை இன்பார்மர்கள் உதவியோடு போலீசார் டெல்லியில் வளைத்தனர். டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த டேராடூனில் இருந்த தமிழ்நாடு சிபிசிஐடி, டெல்லிக்கு பறந்து நேற்று கைது செய்தது. துரிதமாக செயல்பட்ட போலீஸ், தமிழ் படங்களில் வருவது போல அதிரடியாக செயல்பட்டு சிவசங்கர் பாபாவை கைது செய்தது.

    மதன்

    மதன்

    இன்னொரு பக்கம் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த பப்ஜி மதன் இன்னொரு பக்கம் கைது செய்யப்பட்டார். சென்னை கிரைம் போலீசார் இவரை தருமபுரியில் கைது செய்தனர். தருமபுரியில் இருக்கும் இன்பார்மர்கள் மூலம் மதன் எங்கே இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டில் மதன் தலைமறைவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைது

    கைது

    இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த சென்னை சைபர் கிரைம் போலீஸ் மதனை தருமபுரியில் வைத்து கைது செய்தது. இன்றே இவர் சென்னை கொண்டு வரப்பட உள்ளார். ஒரே வாரத்தில் அதிரடியாக இவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலரை குறி வைக்கும் முடிவில் தமிழ்நாடு போலீசார் உள்ளனர்.

    புகார்கள்

    புகார்கள்

    இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்ய வேகம் காட்டி வருகிறார்கள். கடந்த ஆட்சியில் நடவடிக்கையில் இருந்து தப்பி வந்த சிலரை போலீசார் கைது செய்யும் முடிவில் உள்ளனர். முக்கியமாக பெண்களுக்கு எதிரான குற்றத்தில் சிக்கிய நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர். பல்வேறு புகார்களை போலீசார் தோண்டி எடுத்து போலீஸ் கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sexual harassment and to hate speech: Tamilnadu Police made 4 important arrests in a single week
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X