சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7 தமிழர் விடுதலை- ஆளுநர் நிராகரிப்பு- தமிழர்களின் நெஞ்சில் பேரிடி- வேல்முருகன், திருமாவளவன் சீற்றம்

Google Oneindia Tamil News

சென்னை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே இருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu politians about 7 convicts of Rajiv Gandhi Assassination Case

தலைவர்களின் கருத்து விபரம் :

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் - பேரறிவாளன் விடுதலை: ஆளுநர் மறுதலிப்பு என்பது பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நிலைபாடுதான். பாஜக ஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை மூடநம்பிக்கையே என்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இவர்கள் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. எழுவர் விடுதலைக்கான நேரம் கனிந்து வருவதாக தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில்,அதில் மண்ணள்ளிப் போடும் ஆளுநரின் இதுபோன்ற நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது. எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மீது இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.

அதிமுக வைகைச் செல்வன் - 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இல்லை; சட்டத்துறையுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்.

English summary
Tamilnadu politians about 7 convicts of Rajiv Gandhi Assassination Case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X