சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்... தந்திரம் நிறைந்த சூழ்ச்சி... தலைவர்கள் விளாசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: உள்ளாட்சித் தேர்தல் ஊரகப் பகுதிகளில் மட்டும் நடத்தப்படுவது மோசடியான செயல் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மைதீன், உள்ளிட்டோர் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததை கண்டித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் விவரம் பின்வருமாறு;

    தேர்தல் நடக்குமா?

    தேர்தல் நடக்குமா?

    உள்ளாட்சித் தேர்தலை பிரித்து நடத்துவதில் உள்நோக்கம் உள்ளதாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    சூழ்ச்சி

    சூழ்ச்சி

    ஊரக பகுதிகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நடவடிக்கை தந்திரம் நிறைந்த சூழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தலை தள்ளிப்போட நீதிமன்றத்துக்கு தரும் வாய்ப்பாக பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

    முரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடிமுரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி

    விமர்சனம்

    விமர்சனம்

    தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தனித்து செயல்படவில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அவர் செயல்பட்டிருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

    குளறுபடி

    குளறுபடி

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு குழப்பங்கள் நிறைந்ததாகவும், குளறுபடியாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், அறிவிப்பை திரும்பப்பெற்று அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கண்டனம்

    கண்டனம்

    ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது இதுவரை இல்லாத புதுமை என்றும், ஜனநாயக விரோத போக்கிற்கு வழிவகுத்துக் கொடுக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தனது கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    tamilnadu political party leaders statement and opinion for local body election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X