சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர்களிடமிருந்து பறி போகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. குவியும் வட இந்தியர்கள்.. ராமதாஸ் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் வட இந்தியர்கள் மயமாகி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தமிழக மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் கூட தமிழர் இல்லை

ஒருவர் கூட தமிழர் இல்லை

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் 2003ம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்தனர். 2003ம் ஆண்டுக்குப் பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர்.

திணிக்கிறார்கள்

திணிக்கிறார்கள்

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் 2003ம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்து எடுக்கப் பட்டு வந்தனர். 2003ம் ஆண்டுக்குப் பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர்.

கொண்டு வந்து குவிக்கிறார்கள்

கொண்டு வந்து குவிக்கிறார்கள்

இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை அனுமதிக்க முடியாது

இதை அனுமதிக்க முடியாது

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப் பட்ட நிலை மாறி இப்போது அவர்களுக்கு கீழ் உள்ள பணிகள் அனைத்தும் வட இந்தியர்களால் நிரப்பப்படுகிறது. பீகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் ஒடிஷாவை சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

100 சதவீதம் தமிழகத்துக்கே

100 சதவீதம் தமிழகத்துக்கே

எனவே, தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாமக நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
In tamilnadu, all public sector companies including CPCL is full of north Indians, pmk founder ramadoss condemns in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X