சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் வக்கீல்கள் ஸ்ட்ரைக்

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள், ஒரு நாள் முழுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற, பாலியல் பலாத்கார சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu and Puducherry lawyers will be strike on March 18

இந்த சம்பவத்தில், முதலில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழுக் கூட்டத்தின், ஆலோசனை ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வரும் 18ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 35,000 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவும், அவரை முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யவும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu and Puducherry lawyers will protest on March 18 over Pollachi gang rape case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X