தமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5.

தமிழகத்தில் இன்று 55,617 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,54,41,642 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,35,803 ஆகும்.
தமிழகத்தில் இன்று மட்டும் 595 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 8,18,742.
கலெக்டருக்கு கொரோனா.. குடியரசு தினவிழாவில் தேசிய கொடி ஏற்றிய மாவட்ட வருவாய் அலுவலர்!
இன்று 5 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,325 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் கோவையில் 48 பேருக்கும் செங்கல்பட்டில் 37 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,736 மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.