சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது நாளாக புதிய உச்சம்.. தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 288 பேர் பலி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவித்தும் கூட தொடர்ந்து கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவான நிலையில் இன்று தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரம் எடுத்துள்ளது.

சோதனை

சோதனை

தமிழகத்தில் இன்று 160042 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 153363 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை 24308132 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .

இன்று

இன்று

டெஸ்ட் செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 288 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 17056 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

குணம்

குணம்

தமிழகத்தில் இன்று 20037 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 195339 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1531377 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னை

சென்னை

சென்னையில் இன்று 6538 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 44313 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 3197 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 18290 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2225 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13742 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

English summary
Tamilnadu records a new high for the third day: 31892 affected in the state and 288 died today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X