சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்விக் கொள்கைபடி.. தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    Public exam to be conducted for 5, 8th standard students

    சென்னை: புதிய கல்விக் கொள்கையின்படி தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    நாடு முழுவதும் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கி 5, 8-ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது.

    Tamilnadu released GO regarding compulsion of public exam for 5,8th class

    இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின்படி கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி 5, 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க தேர்வு முடிவு வெளியான 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும்.

    அதிலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அந்த மாணவர்களை மீண்டும் அதே வகுப்புகளில் தொடர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதை தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி வரும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5,8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால் தற்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

    English summary
    Tamilnadu passed a GO regarding Public exam to be conducted for 5, 8th standard students from this year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X