சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக உள்ளாட்சித் தேர்தல் Live: 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

தமிழகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் இன்று 2-ஆம் கட்டமாக நடைபெற்றது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

வரிசையில் நிற்போருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே டோக்கன் வைத்துள்ளோர் மட்டுமே 5 மணிக்கு மேல் வாக்களிப்பர். பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Newest First Oldest First
5:05 PM, 30 Dec

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நேரம் முடிந்தது. பிற்பகல் 3 மணி அளவில் 61.45% வாக்குகள் பதிவு. வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
2:14 PM, 30 Dec

மதியம் 1 மணி நிலவரப்படி.. 45.76 சதவீதம் வாக்குகள் பதிவு
2:02 PM, 30 Dec

பகல் 1 மணி நிலவரம்:

தருமபுரி 43.48%; சேலம் 48.7%; ஈரோடு- 48.62%; தூத்துக்குடி- 43.99%; தஞ்சையில் 61.02%; பழனியில் 53% வாக்குகள் பதிவு
12:18 PM, 30 Dec

11 மணி நிலவரம்: தமிழகத்தில் 25.81 சதவீதம் வாக்குகள் பதிவு
11:46 AM, 30 Dec

விருதுநகரில் 26.98% நாமக்கல்லில் 36.13%; சேலத்தில் 28% வாக்குகள் பதிவு
11:42 AM, 30 Dec

மதுரையில் 25.06% நீலகிரியில் 18%; திருச்சியில் 28.9%; தருமபுரியில் 23.79% வாக்குகள் பதிவு
11:38 AM, 30 Dec

11 மணிநிலவரப்படி கன்னியாகுமரியில் 24.65% வாக்குகள் பதிவு
10:24 AM, 30 Dec

காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec

ஈரோட்டில் 14.8%; நாமக்கல்லில் 16.53% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec

திருவண்ணாமலையில் 7.34% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec

மதுரையில் 8.12% வாக்குகள் பதிவு
9:55 AM, 30 Dec

திருச்சியில் காலை 9 மணி நிலவரப்படி 14.8% வாக்குகள் பதிவு
9:55 AM, 30 Dec

கன்னியாகுமரியில் 10.55% வாக்குகள் பதிவு
9:55 AM, 30 Dec

பழனியில் 8% வாக்குப் பதிவு
9:55 AM, 30 Dec

நாகையில் 10.95% வாக்குகள் பதிவு
8:28 AM, 30 Dec

ராமநாதபுரம் அருகே பெரியநேந்தல், பந்தனேந்தல் பகுதியிலும் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
8:28 AM, 30 Dec

ஈரோடு பவானிசாகர் ஒன்றியத்தில் புங்கார் ஊராட்சியிலும் மனைப்பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு
8:28 AM, 30 Dec

ராமநாதபுரம் சித்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் புறக்கணிப்பு
8:28 AM, 30 Dec

தமிழகத்தில் சில இடங்களில் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
7:55 AM, 30 Dec

ஆரணி தாலுக்கா சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
7:55 AM, 30 Dec

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் சிதம்பராபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்குப் பதிவு
7:24 AM, 30 Dec

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது
7:24 AM, 30 Dec

தமிழகத்தில் 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது
5:20 AM, 30 Dec

1551 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன
5:20 AM, 30 Dec

2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
5:20 AM, 30 Dec

முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது
5:19 AM, 30 Dec

27 மாவட்டங்களில் 46 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
5:19 AM, 30 Dec

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

Tamilnadu rural body elections second phase starts today
English summary
Second and last phase of the Tamilnadu local body elections are being conducted today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X