India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பண்ணைப்புரம் டூ பாராளுமன்றம்- ராஜ்யசபா நியமன எம்.பி.யான ராசய்யா எனும் இசைஞானி இளையராஜா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் தேனி மாவட்டத்து பண்ணைப்புரத்தில் ராசய்யாவாக பிறந்து இசை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி.பதவி வழங்கி சிறப்பித்திருக்கிறது மத்திய பாஜக அரசு.

Recommended Video - Watch Now

  Ilaiyaraaja MP Post | இளையராஜாவுக்கு Rajya Sabha MP பதவி *India

  பண்ணைப்புரத்தில் 1943-ம் ஆண்டு பிறந்த இளையராஜாவுக்கு வயது 79. ஆனால் இன்றைக்கும் தமது இசையை இளமையானதாகவே வழங்கி வருகிறார் இசைஞானி. இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தொடக்க காலங்களில் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட சகோதரர்களுடன் இணைந்து கச்சேரிகள், நாடகங்களுக்கு இசை அமைத்தார் இளையராஜா.

  பின்னர் திரை உலகத்துக்குள் நுழைந்த இளையராஜா, தன்ராஜ் மாஸ்டரிடம் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுத் தேர்ந்தார். 1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழகத்துக்கான இசைமரபுக்கு மணிமகுடம் சூட்டி புதிய சரித்திரத்தைத் தொடங்கி வைத்தார் இளையராஜா. 56 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜாவின் இசையில் உருவான மச்சானைப் பார்த்தீங்களா பாடல் இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு குக்குராமத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

  நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா, பி.டி.உஷா நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து!நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா, பி.டி.உஷா நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து!

  அன்னக்கிளி பயணம்

  அன்னக்கிளி பயணம்

  1976-ல் அன்னக்கிளியில் தொடங்கிய இசைஞானியின் தமிழ் திரை உலகப் பயணம் அலைகடல்களைத் தாண்டி கொடிகட்டிப் பறக்கிறது. சிம்பொனி இசையால் உலகதை தன்வயப்படுத்தியவர் இசைஞானி. இதுவரை சுமார் 1,000க்கும் அதிகமாக திரைப் படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்திருக்கிறார்; பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றிப் பாடியும் இருக்கிறார் இளையராஜா. இளையராஜாவின் சிம்பொனி திருவாசகம் மெய்மறக்க வைத்த இசைச் சித்து என்பதில் மாற்று கருத்து இருந்ததும் இல்லை.

  உயர் விருதுகள்

  உயர் விருதுகள்

  இசை உலகில் தொட முடியாத சிகரங்களின் சேர்க்கையாக இமயமலையாக திகழும் இசைஞானிக்கு எத்தனை எத்தனையோ விருதுகள்! 2010-ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றனா பத்ம பூஷண், 2018-ல் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இசைஞானி என இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட பெரும் பட்டம் இன்றளவும் நிலைத்த ஒன்றாக நிற்கிறது.

  சர்ச்சைகள் என்ன

  சர்ச்சைகள் என்ன

  இளையராஜாவை சுற்றிய சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஓய்வும் இருப்பதில்லை என்பதும் ஒருபக்கம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தொடர்பான விமர்சனம் புயலைக் கிளப்பியது. அண்மையில் அண்ணல் அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு முன்னுரை ஒன்றில் எழுதியது ஆழிப்பேரலையையே உருவாக்கிவிட்டது.

  ராஜ்யசபா எம்.பி.

  ராஜ்யசபா எம்.பி.

  தமிழகத்தின் பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நேற்றைய ராசய்யா எனும் இன்றைய இளையராஜா, இப்போது பாராளுமன்றத்தில் மேலவை- நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Tamilnadu's music maestro Ilaiyaraaja nominated to Rajya Sabha.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X