சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறைதான்.. முதல்வர் திட்ட வட்டம்.. குழப்பம் வேண்டாம் மக்களே

Google Oneindia Tamil News

சென்னை: எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை நிறுத்தி வைத்த நிலையில், விட்ட விடுமுறை விட்டதுதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா கொடுமை... கர்நாடகாவில் அதிரடி உத்தரவு

    இந்தியாவில் கொரோனாவால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்திலும் டெல்லியிலும் தலா ஒருவர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்து அவர்கள் குணமடைந்தனர்.

    கொரோனா எதிரொலியால் கேரளம், டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும் கேரளாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    கொரோனா வைரஸை வுகானில் பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்.. பகீர் குற்றச்சாட்டை அளித்த சீனாகொரோனா வைரஸை வுகானில் பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்.. பகீர் குற்றச்சாட்டை அளித்த சீனா

    தமிழக அரசு

    தமிழக அரசு

    இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவை சுகாதாரத் துறை விரட்டி அடித்த நிலையிலும் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் வகுப்புகளுக்கு அதாவது ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது.

    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் அந்த விடுமுறை அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையுடன் சுகாதாரத் துறை ஆலோசிக்க வேண்டும் என்பதால் விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்த விடுமுறை ரத்து செய்யப்படாததால் வரும் திங்கள்கிழமைக்குள் மற்றொரு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    விடுமுறை

    விடுமுறை

    அது போல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ரத்து

    ரத்து

    இந்த விடுமுறை அறிவிப்பால் பிள்ளைகளை காட்டிலும் பெற்றோர் மிகவும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் தற்போது விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மனநிலை தற்போது மாறியது. ஆனால் மதுரையில் மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு, ஏற்கனவே அறிவித்தபடி விடுமுறைதான் என அறிவித்துவிட்டார். அதனால் மக்களே.. குழந்தைகளுக்கு லீவு கன்பார்ம்தான். ஆனால் அரசுக்குள் ஏன் இவ்வளவு குழப்பம் என்றுதான் தெரியவில்லை.

    English summary
    Tamilnadu School Education department stopped leave announcement for all kinder garden classes as it has to discuss with health ministry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X