சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பா?.. யார் சொன்னது?.. மறுக்கும் பள்ளிக் கல்வித் துறை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளி வந்த தகவல்கள் தவறானது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கூறுகையில் தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது; சூழல் சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

விழுப்புரம் அருகே அதிர்ச்சி... இறந்த கொரோனா நோயாளி உடல்... புதைக்க கிராமத்தினர் எதிர்ப்பு!! விழுப்புரம் அருகே அதிர்ச்சி... இறந்த கொரோனா நோயாளி உடல்... புதைக்க கிராமத்தினர் எதிர்ப்பு!!

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

இதனால் பள்ளிகளை திறப்பது குறித்து ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறது. எனினும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகிறார்கள். அது போல் அரசு பள்ளிகளும் தற்போது டிவி மூலம் வகுப்புகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

பள்ளிகளைத் திறப்பது

பள்ளிகளைத் திறப்பது

செப்டம்பர் மாதம்தான் பள்ளிகளைத் திறப்பது எப்போது என்பது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கருத்துகளை கூற பெற்றோரை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கொரோனா சுத்தமாக நீங்கும் வரை குழந்தைகளை பள்ளி அனுப்ப மாட்டோம் என்கிறார்கள் பெற்றோர்கள்.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

ஆனால் சிலர் பள்ளிகளை திறப்பதற்கு முன்னர் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க போகிறீர்கள் என வினவியுள்ளார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

அவ்வாறு திறக்கும் போது முதலில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நவம்பர் மாதத்திற்கு பிறகு எடுக்கப்படும் பாடங்களை கொண்டு முழு ஆண்டு தேர்வு நடத்த ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வேளை நவம்பரிலும் கொரோனா குறையவில்லை என்றால் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்வர் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பரில் பள்ளித் திறப்பு தவறான செய்தி

நவம்பரில் பள்ளித் திறப்பு தவறான செய்தி

இந்த தகவல்கள் வைரலான நிலையில் இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கூறுகையில் தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது; சூழல் சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

English summary
School Education Ministry says that School reopening in November is a wrong news. It will be decided and announced by CM of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X