சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? - தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பெற்றேர்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. ஏராளமான பெற்றோர்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் கருத்துக்களை பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு இன்று தொடங்கியது. தனிமனித இடைவெளியுடன் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து படிவங்களில் பதிவு செய்து வருகின்றனர். கருத்துக்கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பள்ளி திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றாலும் அனைவருக்கும் அது பயன்தரவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் வருகிற 16ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 9ஆதேதி இன்று நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

TamilNadu school reopens Consultation with parents throughout Tamil Nadu

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு இன்று தொடங்கியுள்ளது.

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. தனிமனித இடைவெளியுடன் சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட்டு வருகின்றனர். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The consultation of the parents of the students concerned in the 9th, 10th, 11th and 12th class schools across Tamil Nadu started today. Opinion meetings are held in schools across Tamil Nadu with individual intervals. Parents are recording their comments on the forms. The government will decide on the opening of the school based on the decision taken at the consultation meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X