சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மினிமம் கட்டுப்பாடு.. தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் விதிகள்? இன்று மீட்டிங் போடும் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை; கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவது குறித்தும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 3 வாரமாக அதிகரித்து வந்த கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 32,24,236 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29976 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் கொரோனா மூன்றாவது அலையை கடந்து விட்டோமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விடிவுகாலம்! இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சரியும் கிராப்.. என்ன நடக்கிறது? விடிவுகாலம்! இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சரியும் கிராப்.. என்ன நடக்கிறது?

 தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் 2,13,692 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஆனாலும் மருத்துவமனையில் பெரிய அளவில் நோயாளிகள் சிகிச்சை பெறவில்லை. ஓமிக்ரான் மிகவும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பலி எண்ணிக்கையும் பெரிதாக உயரவில்லை. 29,73,185 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,359 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 47 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா கேஸ்கள் லாக்டவுன்

கொரோனா கேஸ்கள் லாக்டவுன்

இந்த நிலையில் கொரோனா கேஸ்கள் குறைவதை காரணம் காட்டி தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. . தற்போது இரவு நேர லாக்டவுன் மாநிலம் முழுக்க அமலில் உள்ளது. மேலும் ஞாயிறு முழு லாக்டவுன் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சினிமா தியேட்டர்களில் 50 சதவிகித கூட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாக்டவுன்

தமிழ்நாடு லாக்டவுன்

இதற்கு முந்தைய வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. மக்கள் ஞாயிறுகளில் அதிக அளவில் கடைகளுக்கு செல்வதால் இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இதை மக்கள் விரும்பவில்லை. அதோடு சனிக்கிழமையே மக்கள் அதிக அளவில் கடைகளில் கூடும் நிலை ஏற்பட்டது. இது கொரோனா பரவலை அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. இதையடுத்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டன.

 ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு தளர்வு

இந்த நிலையில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவது குறித்தும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    ஸ்டாலின் ஆலோசனை

    ஸ்டாலின் ஆலோசனை

    இந்த கூட்டத்திற்கு பின்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மினிமம் லாக்டவுன் எனப்படும் குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு இரண்டில் ஒன்று தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. அல்லது இரண்டும் நீக்கப்பட்டு, பொதுவான சில கேளிக்கை நிகழ்வுகள், கூட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Tamilnadu see huge relaxations in lockdown: CM Stalin to hold a meeting today with officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X