சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்றைவிட இன்று அதிகம்.. புதிதாக 96 பேருக்கு கொரோனா.. தமிழக மொத்த எண்ணிக்கை 834ஆக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

Recommended Video

    ரேண்டம் சோதனையை செய்ய தவறிய தமிழகம்

    இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் கூறுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.

    Tamilnadu sees 96 new coronavirus patients on today: Beela Rajesh

    டெல்லி சென்று வந்த 1480 பேரில் 763 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. 59 ஆயிரத்து 918 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 32,796 பேர் 28 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு, அந்த காலகட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

    தமிழகத்தில் 7267 பேருக்கு இவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்த பிறகு, பரிசோதனை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதுவரை, பாதிப்பிலிருந்து, 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

    நேற்று புதிதாக 48 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று பழையபடி தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

    படிப்படியாக இந்த நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

    English summary
    Tamilnadu sees 96 new coronavirus patients on today, says State Health secretary Beela Rajesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X