சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது... சர்ச்சையைக் கிளப்பும் பாஜக ஆதரவாளர்!

தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது என பாஜக ஆதரவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது- வீடியோ

    சென்னை: தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது எனக் கூறி பாஜக ஆதரவாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

    மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 330 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என எல்லாக் கட்சிகளுக்கும் சேர்த்து 2 தொகுதிகளில் தான் முன்னிலை கிடைத்திருக்கிறது. திமுக கூட்டணிக்கு 37 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    பாஜக வேட்பாளர்கள்

    பாஜக வேட்பாளர்கள்

    தமிழக பாரதிய ஜனதாவின் நட்சத்திர வேட்பாளர்களான தமிழிசை , எச்.ராஜாவால் கூட முன்னிலை பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

    சர்ச்சை பதிவு

    இந்நிலையில், பாஜக ஆதரவாளர் ஒரு சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்துள்ளார். அதாவது, தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடே ஒரு திசையில் போகும் போது, தமிழ்நாடு மட்டும் தனி திசையில் செல்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நடிகர்களுக்கு தான் தங்கள் விசுவாசத்தை காட்டுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சரியான பதிலடி

    சவுகிதார் சுமா எனும் அந்த பாஜக ஆதரவாளருக்கு, தமிழகத்தை சேர்ந்த சிலர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தமிழக தேர்தல் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சியையே கொடுக்கிறது என்றும், இனி 100 ஆண்டுகள் கடந்தாலும், தமிழ் மண்ணில் பாஜகவால் காலூன்ற முடியாது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

    கேலி டிவீட்

    அதேபோல் சவுக்கிதார் சுமாவை கேலி செய்யும் வகையில், "நீங்கள் சொல்வது சரியான விஷயம். எங்களை இந்தியாவில் இருந்து பிரித்து, கனடா, அமெரிக்கா, ஸ்வீடன், சீனா போன்ற ஏதாவது ஒரு நல்ல நாடுடன் இணைத்துவிடுங்கள்" என சிலர் பதிலளித்துள்ளனர். மேலும், "இப்படி புலம்புவதை நிறுத்திவிட்டு, மக்களின் முடிவுக்கு மரியாதை கொடுக்கப் பாருங்கள்", என சிலர் பதில் அளித்துள்ளனர்.

    English summary
    A BJP supporter stir a controversy by tweeting "Tamilnadu should not be a part of India".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X