சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Tamilnadu sslc result 2019: தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu sslc result 2019: 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 95.2% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர்.

    Tamilnadu SSLC result will be release today, time is 9.30 am

    இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவு இணையதளங்களில் வெளியானது. 95.2% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி, மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடம், நாமக்கல் மாவட்டம் 3வது இடம் பிடித்தது.

    தாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு தாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் பட்டியல் எஸ்எம்எஸ் வாயிலாகவும் அனுப்பப்பட இருக்கிறது.

    கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர். அதை ஒப்பிட்டால், 0.07 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்எஸ்எல்சி தேர்வில், ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    English summary
    Tamilnadu SSLC result will be released on April 29, 2019 by Directorate of Government Examination (DGE), Tamil Nadu in the online mode at 9.30 am.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X