சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவகாசிக்கு குறி வைக்கும் பாஜக.. விட்டுத்தருமா அதிமுக?.. பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?

அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சிவகாசி: ''உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.. அதேசமயம் சிவகாசி மேயர் பதவியை அதிமுகவிடம் கேட்க போவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது..

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை பொன்.ராதா சந்தித்தபோது, பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன..

 கூட்டணியை பற்றி பேச பொன்.ராதா யார்...? அவருக்கு என்ன பவர் உள்ளது...? கே.பாலகிருஷ்ணன் கேள்வி..! கூட்டணியை பற்றி பேச பொன்.ராதா யார்...? அவருக்கு என்ன பவர் உள்ளது...? கே.பாலகிருஷ்ணன் கேள்வி..!

திமுக

திமுக

அப்போது உள்ளாட்சி தேர்தல், கொரோனா நடவடிக்கை, திமுகவின் ஆட்சி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொன்.ராதா தந்த பதில்கள்தான் இவை: "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியே தொடரும்... கூட்டணியோடு தேர்தலை சந்திக்கின்றோம். சிவகாசி மேயர் பதவியை பாஜகவிற்கு வழங்க வலியுறுத்துவோம்.. அதிமுக ஒதுக்கும் என நம்புகிறோம்.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்கள், இறப்புகளால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்ல முதலாளிகளும் தான். அதனால், பாதுகாப்புக்கான திட்டங்கள் தீட்டப்படும்... பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க கூட முடியாது. பட்டாசு குறித்து முழுமையாக ஆய்வு செய்து பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழில் நசிந்து போய்விடக் கூடாது.

 பொய்யான வாக்குறுதி

பொய்யான வாக்குறுதி

கொரோனா தடுப்புவிதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும்... பிரதமர் மோடியின் முயற்சியால் 150 கோடி பேருக்கு தடுப்பூசி இப்போது போடப்பட்டுள்ளது... தமிழ்நாட்டில் கேட்டதற்கும் அதிகமான தடுப்பூசிகளை பிரதமர் வழங்கி உள்ளார்... இதை முறையாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய பாராட்டுக்கள்... தேர்தலுக்காக திமுகவின் முதல் மூலதனமே பொய்யான வாக்குறுதி மட்டுமே... ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவார்கள்..

இலவசம்

இலவசம்

அதிமுக ஆட்சியில் பொங்கலுக்காக மக்களுக்கு ரூ.2500 வழங்கினார்கள்.. ஆனால் திமுக அரசு ஏமாற்றி விட்டது. இலவசம் கொடுத்து கொடுத்து கேவலமாக மாற்றிவிட்டார்கள்.. இதுவரை வந்த கருத்து கணிப்பின்படி உத்தரபிரதேசம், சிக்கிம் உட்பட 5 மாநிலங்களிலும் பாஜகவே அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது..

 தமிழக ஊர்தி

தமிழக ஊர்தி

குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது தமிழர்களுக்கு மட்டும் பெருமையில்லை.. இந்தியாவிற்கே பெருமை. தமிழர் ஊர்தி செல்வது நல்லது.. அது அனுமதிக்கப்பட வேண்டும். தமிழர் ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப் போவதில்லை.. தமிழரின் பெருமையை பேசுவதில் மோடியை போன்று வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை. ஆனால் ஊர்தி எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படியே அனுமதி வழங்கப்படும்" என்றார்.

English summary
Tamilnadu tableau should be included in republic day parade, says Ex Minister Pon Radhakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X