சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை நாளை கொண்டாடப்பட உள்ளது. இன்று மத்திய கிழக்கு நாடுகள் பல ரமலான் பண்டிகை கொண்டாடினார்கள்.

உலகம் முழுக்க ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். கடந்த மே 5ம் தேதி தொடங்கிய நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இந்த பண்டிகைக்கு நிறைய சிறப்புகள் உள்ளது. சமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் வகையில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் விழா ஆகும் இது.

Tamilnadu to celebrate Muslims festival Ramzan tomorrow

ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட இஸ்லாமியர்களுக்கு இது மிக முக்கியமான மாதமாகும். இதில் சூரியன் உதிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும், அதன்பின் நோன்பு இருக்க வேண்டும், மீண்டும் சூரியன் மறைந்த பின்தான் நோன்பை துறக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் இதை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்துதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து

இந்த மாதங்களில் இஸ்லாமியர்கள் தீய பழக்கங்கள் எதையும் மக்கள் கடைபிடிக்க மாட்டார்கள். உடல் பிணி மற்றும் வயோதிகம் காரணமாக நோன்பு இருக்க முடியாத நபர்கள், ஒரு ஏழைக்காவது உதவ வேண்டும் என்று குரானில் இருக்கிறது. நோன்பை பாதியில் விடும் நபர்கள் 7 ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று குரான் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் இன்று ரமலான் பெருநாள் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் மே 25ல் ரம்ஜான் கொண்டாடப்படும்

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் போது இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுது கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனா காரணமாக இந்த முறை அப்படி தொழுகை செய்ய முடியாது. புனிதத்தையும் , சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்.

English summary
Tamilnadu to celebrate Muslims festival Ramzan tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X