சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 மாவட்டங்கள்.. 7 கி.மீ சுற்றளவு.. தலைக்கு 50 வீடு.. ஊழியர்கள் வீடு வீடாக அதிரடி சோதனை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்பட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 10 மாவடங்களில் இன்று காலை முதல் மாலை வரை யாருக்கேனும் இருமல், சளி, மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சோதனை நடத்தினார்கள்

Recommended Video

    ‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்!

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ஆய்வு செய்த பின்னர் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    tamilnadu to launch corona containment drive on sunday. a 7 km radius buffer zone

    அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 60 வயது ஆண் ஒருவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று நேற்று தஞ்சாவூர், வேலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1500 பேருக்கு மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டது.அதில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உச்சபட்சமாக 179 பேருக்கு கொரோனா.. 900த்தை தாண்டியது இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உச்சபட்சமாக 179 பேருக்கு கொரோனா.. 900த்தை தாண்டியது

    கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ள சென்னை, கோவை வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியக்ளிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் பேசினோம்.

    பாதிக்கப்பட்ட வீடுகளை சுற்றி 7 கிலோமீட்டர் சுற்றளவில் 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று இருந்தால் அவர்களுடைய பட்டியலை தயார் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 41 பேரில் 11 பேர் உள்நாட்டில் இருந்து பரவியர்கள்" என்றார்.

    English summary
    tamilnadu to launch corona containment drive on sunday. a 7 km radius buffer zone to be demarcated around the place of every positive case every resident to be screened for corona symptoms in the zone vulnerable people to be given masks / put on isolation tn tally 41 nowonvert case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X