சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெட்ராஸ்ஸ சுத்தி பார்க்க போறேன்.. மெரினாவில்.. ஆம் அதுவும் வெறும் 10 ரூபாயில்.. புத்தாண்டு சலுகை

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு அன்று ரூ 10 கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடன் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

பட்டிமன்ற பாப்பம்மாவாக மாறிய கஸ்தூரி.. கலகல கலவர பட்டிமன்றம்! பட்டிமன்ற பாப்பம்மாவாக மாறிய கஸ்தூரி.. கலகல கலவர பட்டிமன்றம்!

சுற்றுலா

சுற்றுலா

புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று திருவல்லிக்கேணி சுற்றுலாக்கழக அலுவலக வளாகத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும். சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத்திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் இயக்கம்

சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 15 பேருந்துகள் இதற்காக இயக்கப்பட உள்ளது. அந்த பேருந்துகள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

இதற்கு ரூ.10 கட்டணம் ஒருவருக்கு வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.

தகவல்கள்

தகவல்கள்

இது தொடர்பான கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 42531111 மேலும் தொடர்புக்கு 044-25333333, 25333857, 25333850 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Tourism Development Corporation arranges to go Chennai's iconic places for Rs 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X