சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம்.. தமிழக போக்குவரத்து போலீஸ் அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவில் 93 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான மாற்றங்கள் போக்குவரத்து வீதிமீறலகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் உள்ளன.

Tamilnadu traffic police will revised traffic violation fines soon

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், தற்போது வரை தமிழகத்தில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் 100 ரூபாய் தான் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து காவல்துறையினர் விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விரைவில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் இப்போது உள்ள அபராதத்தை விட 10 மடங்கு அதிகம் அபராதம் விதிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி முன்பு ஹெல்மெட் போடாமல் முன்பு வாகனம் ஓட்டினால் எச்சரித்துவிடுவார்கள் அல்லது 100 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க உள்ளார்கள். வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கட்டயாம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். எனவே சட்டம் நடைமுறைப்படுத்தும் முன்பு இருசக்கர வாகனம் வைத்துள்ளோர் ஓடிப்போய் ஒன்று அல்லது இரண்டு ஹெல்மெட் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அந்தநேரத்தில் ஹெல்மெட் விலை தாருமாறாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பெற்ற மகளை.. கர்ப்பிணி என்றும் பாராமல்.. வெட்டி தள்ளிய தந்தை.. காதல் திருமணம் செய்ததால் வெறியாட்டம் பெற்ற மகளை.. கர்ப்பிணி என்றும் பாராமல்.. வெட்டி தள்ளிய தந்தை.. காதல் திருமணம் செய்ததால் வெறியாட்டம்

இதனிடையே மேலும் சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் விதிக்கப்போகும் அபாரதங்களையும் சொல்லிவிடுவோம். இனி வாகனத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். சிக்னலை மீறுவது போன்ற வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சில விதிமீறல்களுக்கு முன்பு 100 ரூபாய். அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி அபராதம் 500 ரூபாய். ஆகும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் முன்பு 500 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இனி 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். குடித்துவிட்டு ஓட்டினால் 1 முன்பு 2000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். இனி குடித்தால் வண்டியை தொட்டால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் கட்ட வேண்டியது வரும்.

English summary
Tamilnadu polcie will revised traffic violation fines soon after motor vehicle act amendment 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X