சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதமான காற்றுடன் இரவில் பெய்த மழை.. ஜில்லென்று மாறிய சென்னை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பரவலாக மழை பெய்ததால், குளுமையான தட்ப வெட்பம் நிலவிவருகிறது.

Recommended Video

    Weather Update : தென்மேற்கு பருவக்காற்று வருகிறது..எங்கெல்லாம் பெய்யும்?

    சென்னையில், இந்த கோடை காலத்தில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இரவு, நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு குளிர்ந்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் ஓரளவு பலத்த மழை பெய்தது.

    Tamilnadu weather: Rain lashes Chennai on today

    அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், பூவிருந்தவல்லி, மதுரவாயல், கிண்டி, கேகே நகர், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பதிவு இருந்தது. இதனால், வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைப்போன்ற மிதமான மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்

    சென்னையில் நேற்று இரவு, புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை, சேறும் சகதியுமாக மாறியது. எனவே லாரிகளில் வந்த காய்கறிகளை இறக்கி வைக்க முடியாமல் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கோயம்பேடு மார்க்கெட் செயல்படாததால் திருமழிசை மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று மழைக்காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுவதாகவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

    English summary
    Rain lashes many parts in Chennai on today evening, the rain continues in capital city since 3 days, chill weather is a pleasant surprise for Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X