India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை காத்திருக்கு! ஜாக்கிரதையா இருங்க மக்களே! குடை மறக்காதீர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இரு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மூன்று நாள் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. வால்பாறை கூழாங்கல் ஆற்றுக்கு செல்ல தடை

    தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    இந்தச் சூழலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த இரு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    என்னா குளிரு.. சென்னையில் 2ஆவது நாளாக செம மழை.. மக்கள் ஹேப்பி #ChennaiRains என்னா குளிரு.. சென்னையில் 2ஆவது நாளாக செம மழை.. மக்கள் ஹேப்பி #ChennaiRains

    மழை

    மழை

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 7) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

     வரும் நாட்கள்

    வரும் நாட்கள்

    நாளை (ஜூலை 8) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (ஜூலை 9) முதல் ஜூலை 11 வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை

    சென்னை

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

     அதிகம் மழை பெய்த இடங்கள்

    அதிகம் மழை பெய்த இடங்கள்

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சில் 13செமீ மழை பெய்துள்ளது. அதேபோல சின்னக்கல்லார் (கோவை), தேவாலா (நீலகிரி) தலா 9 செமீ மழை பெய்துள்ளது. ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

     மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    இன்றும் (ஜூலை 7) நாளையும் (ஜூலை 8) ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 11 வரை லட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Few districts in tamilnadu will have heavy rain: (அடுத்த இரு நாட்களுக்கு நீலகிரி, கோவை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும்) Chennai weather report latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X