சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் எழுந்த பயங்கர சப்தம்.. காரணம் என்ன?.. ஆதாரங்களுடன் வெளியிட்ட வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரில் நேற்று பிற்பகல் எழுந்த மிகப் பெரிய சப்தம்" சோனிக் பூம்" ஆக இருக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Bangalore Boom Sound Truth Explained In Tamil

    பெங்களூரில் நேற்று பிற்பகல் பயங்கர சப்தம் எழுந்தது. இந்த சப்தம் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்த சப்தம் குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஏலியன்கள் பெங்களூருக்கு படையெடுத்துவிட்டதாக கூட சிலர் கிளப்பி விட்டனர்.

    ஒரு ட்வீட்டால் வந்த வம்பு.. சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக போலீஸ் எப்.ஐ.ஆர்ஒரு ட்வீட்டால் வந்த வம்பு.. சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக போலீஸ் எப்.ஐ.ஆர்

    பெங்களூர்

    பெங்களூர்


    இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு விளக்கத்தை தந்துள்ளார். அவர் கூறுகையில் பெங்களூரில் நேற்று ஏற்பட்ட சப்தம் பெரும்பாலும்
    "சோனிக் பூம்" ஆக இருக்கலாம். இதைத் தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

    சோனிக் பூம்

    சோனிக் பூம்

    திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் இது போல் ஏற்பட்ட சப்தம் குறித்து வெளியான செய்திகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பெங்களூர் சம்பவம் குறித்து கூறுகிறேன். பெங்களூரில் கேட்கப்பட்ட ஒலியானது பெரும்பாலும் வளிமண்டலத்தில் பெரிய விண்கற்கள் (போலைட்) வெடித்ததால் அல்லது சோனிக் பூம் ஆக இருக்கும்.

    நெருப்பு பந்து

    நெருப்பு பந்து

    போலைட் என்றால் என்ன என சர்வதேச வானியலாளர்கள் அமைப்பு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் கூறவில்லை. எனவே இதை நெருப்பு பந்து என கூறலாம். பொதுவாக வெடிக்கும் பொருளை போலைட் என்றே வானியலாளர்கள் கூறுகிறார்கள். அவை சில நேரங்களில் வெடிக்கும் நெருப்பு பந்து என அழைக்கப்படுகிறது.

    அதிக சப்தம்

    அதிக சப்தம்

    சோனிக் பூம் என்றால் என்ன? நெருப்பு பந்திலிருந்து வெளியாகும் ஒலியே சோனிக் பூம் ஆகும். ஒலியின் வேகத்தை காட்டிலும் அதிவேகத்தில் ஒரு பொருள் பயணிக்கும் போது ஏற்படும் சப்தமே சோனிக் பூம் ஆகும். அதன் வேகத்தால் பயங்கர ஒலியை ஏற்படுத்தும். அதாவது ஒரு கூழாங்கல்லை நீரில் தூக்கி வீசும்போது ஏற்படும் கோள வழி ஒலி அலைகளுக்கு பதிலாக கூம்பு போல் ஒலியின் வேகத்தை விட மிகவும் வேகமாக ஒரு பொருள் பயணிக்கும் போது அதிக சப்தத்தை ஏற்படுத்தும்.

    திருப்பூர்

    திருப்பூர்

    இது தண்ணீரில் மோட்டார் படகை இயக்கும் சப்தத்தை போன்றது. கூம்பு போன்ற வடிவில் ஒலி ஏற்பட்டால் அவை மணிக்கு 25 ஆயிரம் மீட்டர் வேகத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். அதாவது ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் ஒரு பொருள் பயணிப்பது. இந்த சப்தத்தை தவிர்க்க முடியாதது என கூறியுள்ள பிரதீப் ஜான், வாஷிங்டன், கேரளா, திருப்பூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட சோனிக் பூம் குறித்து செய்திகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman explains about the sound heard in Bangalore is likely to be sonic boom.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X