சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது புயல்ங்க.. இது வெறும் டிரைலர்தான்.. மெயின் பிக்சர் நாளைதான் இருக்கு.. வெதர்மேன் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று பெய்வதெல்லாம் வெளிப்புற மேகங்களாலும் காற்றின் காரணமாகவும் மழை பெய்கிறது. இது சும்மா டிரெய்லர்தான், மெயின் பிக்சர் நாளை மதியம் முதல் பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த நிவர் புயல் இலங்கைக்கு மேல் ஸ்டாலிங்கில் வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் ஒரு இடத்தில் நிற்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இது மெல்ல மெல்ல நகர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ஆம் தேதி இரவு- 26-ஆம் தேதி அதிகாலையில் வடதமிழகத்தில் சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயலால் புதுவை, காரைக்காலில் கடல் சீற்றம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு! நிவர் புயலால் புதுவை, காரைக்காலில் கடல் சீற்றம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு!

ரோடு கிராஸ்

ரோடு கிராஸ்

புயல் கடப்பது என்பது ஒரு சாலையை கிராஸ் செய்வது போன்றதல்ல. அதன் மையப் பகுதியே 50 கி.மீ. விட்டம் கொண்டிருக்கும். காற்றின் வேகமானது மேற்கு பகுதியில் அதிகமாக இருக்கும். மகாபலிபுரத்தில் கரையை கடந்தால் சென்னையிலும் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மெயின் பிக்சர்

மெயின் பிக்சர்

அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, வடவிழுப்புரம், மரக்காணம் , புதுவை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்டவை புயலின் பாதையில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த இடங்களில் கனமழை முத்ல மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தற்போது சென்னையில் பெய்து வரும் மழை வெளிப்புற மேகங்களால் ஏற்படுவது. வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சரை நாளை முதல் பார்க்கலாம். புயல் வெகு தொலைவில் இருப்பதால் விட்டுவிட்டுதான் மழை பெய்யும்.

அடர்த்தியான மேகங்கள்

அடர்த்தியான மேகங்கள்

புயல் அருகே வரும்போது தான் அடர்த்தியான மேகங்கள் வரும். அப்போது விட்டு விட்டு மழை பெய்யாது. எப்போது புயல் கரையை கடக்கிறதோ அந்த சமயத்தில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எங்கு கரையை கடக்கிறதோ அந்த மையப்பகுதியில் மிக மிக கனமழை பெய்யும். அந்த சமயத்தில் எதிரே உள்ள சுவரை கூட பார்க்க முடியாது. கரையை நெருங்க நெருங்க மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

நகர்வதில் தாமதம்

நகர்வதில் தாமதம்

நாளை மதியம், மாலை, இரவு பகுதிகளில் மிக கனமழை பெய்யும். நாளை மாலைக்கு பிறகுதான் புயலானது கரையை கடக்கத் தொடங்கும். நகர்ந்து வருவதில் காலதாமதம் உள்ளதால் மாலை மேல் இரவு நேரத்தில்தான் கரையை கடக்கத் தொடங்கும். இந்த புயல் கரையை கடப்பதில் ஒரு நல்ல விஷயம் உள்ளது. டெல்டா பகுதிகளில் கரையை கடக்காமல் சென்னை அருகே கரையை கடப்பதுதான்.

புயல்

புயல்

சென்னை கடல் மட்டத்திற்கு மேல் இருக்கிறது. எனவே பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும். இரவு நேரத்தில் கரையை கடப்பதால் மக்களுக்கான பாதிப்பு குறைவாகவே இருக்கும். புயல் கரையை கடக்கும் இடங்களில் விடாமல் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 20 முதல் 30 செ.மீ. மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதற்கு மேலும் மழை பெய்யலாம். இது மழை நிறைந்த புயலாகவும் காற்று நிறைந்த புயலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயார் நிலை

தயார் நிலை

வர்தா புயலின் போது சென்னையில் 120 கி.மீ. தூரத்தில் காற்று வீசியது. கஜா புயலின் போது 120- முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. தானே புயல் 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் வீசியது. இந்த நிவர் புயலானது 100 முதல் 110 கி.மீ. வரை வீசும். நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காற்று வீசும். எனவே 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதை கருதி தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கடல் பகுதிக்கு

கடல் பகுதிக்கு

ஒரு புயல் கரையை கடந்தால் அந்த புயலின் வடபகுதியானது இடதுபக்கமாக (ஆன்டி கிளாஸ்வைஸ்) சுற்றுவதால் கடல் சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும். கன்னியாகுமரி, ராமநாதபுரம் அருகே சென்றால் கடல் அமைதியாக இருக்கும். அதே கடலூர், புதுவை, சென்னை கடற்கரைகளுக்கு சென்றால் கடல் சீற்றத்துடனே காணப்படும். புயல் எங்கேயோ கரையை கடக்கிறது என எண்ணிக் கொண்டு வடபகுதியில் இருந்தாலும் மக்கள் கடல் பகுதிக்கு செல்லக் கூடாது.

இரவு நேரத்தில் எச்சரிக்கை

இரவு நேரத்தில் எச்சரிக்கை

சென்னையில் நாளை கனமழை பெய்யும். இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னை, புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் புயல் கரையை கடக்கும் போது வெளியே வர வேண்டாம். புயல் கரையை கடப்பது 2 பகுதிகள் உள்ளன. முதலில் வடமேற்கு திசையிலிருந்து காற்று வரும் , உள்ளே போன பிறகு தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும். மையப்பகுதிக்கு செல்லும் போது அமைதி இருக்கும் என்றார் பிரதீப் ஜான்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that today is trailer for Chennai, but there is main picture of heavy rain tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X