சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை! தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகம் நவம்பர் 18 வரை கடலோரப் பகுதிகளில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல் - வீடியோ

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்து வருகிறது.

    தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர், அதாவது 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க!ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க!

    தென் மாவட்டங்கள்

    தென் மாவட்டங்கள்

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று கடுமையான மழை காத்திருக்கிறது என்று அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்த மூன்று மாவட்டங்கள் மீதும் கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    இதுவரை இல்லாத மழை

    இதுவரை இல்லாத மழை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார். தூத்துக்குடியில் இந்த வருடத்தில் இல்லாத அளவுக்கான கன மழை பெய்து உள்ளதாகவும், கன்னியாகுமரி முதல் சென்னை வரை பெரிய மழை காத்திருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     வெளியே போக வேண்டாம்

    வெளியே போக வேண்டாம்

    இதனிடையே தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கனமழை பெய்வதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

     பழைய கட்டிடங்கள்

    பழைய கட்டிடங்கள்

    பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்கவே கன மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் இன்று மதியம் 2 மணிவரை 15 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.

    English summary
    Rain lashes South Tamilnadu especially in Tuticorin, as the city was received 100mm in last 90 minutes. Kanyakumari and Tirunelveli districts will also get rain, says Tamil Nadu weatherman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X