சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிஞ்சு போச்சு தென் மேற்குப் பருவ மழை.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10,000 மிமீ மழை.. இது செம சீசன்!

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்த நிலையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பீகார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நன்மையை அளிக்கும் தென்மேற்கு பருவமழை கடந்த சில மாதங்களாக தொடங்கி வடமாநிலங்களை பதம் பார்த்தது. இதனால் வடமாநிலங்கள் நீரில் தத்தளித்தன.

இந்த நிலையில் இன்றுடன் மழை காலம் முடிவடைந்துவிட்டது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

லமாஜில் அதிக மழை

லமாஜில் அதிக மழை

இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இன்றுடன் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துவிட்டது. மகாராஷ்டிரத்தில் மகாபலேஸ்வர் பகுதிக்கு அருகே உள்ள லமாஜில் 10 ஆயிரம் மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அகும்பே

அகும்பே

தென்மேற்கு பருவமழையில் நீண்ட காலத்திற்கு பிறகு 10 ஆயிரம் மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கர்நாடகத்தில் பெல்காம் பகுதியில் கானாபூர் தாலுக்காவில் அமாகான் பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. அகும்பேவில் அந்தளவுக்கு மழையில்லை.

அதிக மழை

அதிக மழை


ஷிமோகாவில் ஹூலிகல்லில் அதிகமழை பெய்தது. அதிகபட்சமாக 10 ஆயிரம் மி.மீ. தொடங்கி குறைந்தபட்சம் 7 ஆயிரம் மி.மீ.வரை மழை பெய்தது. இந்தியாவில் அதிக மழையை பெற்ற பகுதிகள் பின்வருமாறு:

1. லமாஜ், மகாராஷ்டிரம்- 10970 மி.மீ
2. தம்ஹினி, மகாராஷ்டிரம்- 9635
3. அம்போலி- 9544
4. பதார்புஞ்ச்- 9514
5. அமாகான், கர்நாடகம்- 9193
6. ஷிர்காவ்ன், மகாராஷ்டிரம்- 9170
7. தபோலா- 8816
8. ஜோர்- 8728
9. டவாடி- 8720
10. கவாலி, கர்நாடகம்- 8549

தூத்துக்குடியில் அதிக மழை

தூத்துக்குடியில் அதிக மழை

அது போல் சென்னை விமானநிலையத்தில் 689 மி.மீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, கோவை விமான நிலையம், தூத்துக்குடி, கரூர் மற்றும் பாளையம்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.

1. திருத்தணி- 931 மி.மீ
2. தருமபுரி- 763
3. வேலூர்- 748
4. சேலம்- 732
5. சென்னை விமான நிலையம்- 689
6. பாண்டி- 588
7. திருப்பத்தூர்- 541
8. கடலூர்- 512
9. சென்னை நகரம்- 493
10. தஞ்சை- 443
11. கன்னியாகுமரி- 440
12. நாகை- 435
13. திருச்சி விமான நிலையம்- 367
14. மதுரை விமான நிலையம்- 344
15. கோவை விமான நிலையம்- 247
16. கரூர்- 221
17. பாளையம்கோட்டை- 166
18. தூத்துக்குடி- 95

2020-ஆம் ஆண்டு வரை காத்திருப்போம். உலகில் எந்த பகுதியிலும் இது போன்று குறைந்த நேரத்தில் மழை பெய்ததில்லை. உலகில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் பொக்கிஷங்களாகும்.

English summary
Tamilnadu Weatherman says that South west Monsoon have come to end Statistically, lets see the Toppers and the Cities Rainfall in mm (01.06.19 to 30.09.19). Lamaj near Mahabaleshwar in Maharashtra tops with over 10000 mm for the monsoon season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X